- Advertisement -
ஐ.பி.எல்

கொஞ்சம் தப்பு கணக்கு போட்டுட்டேன்.. சறுக்கல் ஏற்பட்டது இங்கதான் – ரியான் பராக் வருத்தம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

முதல் தோல்விக்கு பின்னர் வருத்தம் தெரிவித்த ரியான் பராக் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்து. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 91 ரன்களையும், கிளாஸன் 40 ரன்களையும் குவித்தனர். பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது :

- Advertisement -

சன் ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 57 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்யும் போது விரைவாக அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது தான் எங்களுடைய தோல்விக்கு காரணம். சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும். ஏனெனில் நாங்கள் சில தப்பு கணக்குகளை போட்ட வேளையில் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தி விட்டனர். இந்த ஆடுகளத்தில் இரண்டாவதாக பந்துவீசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த – அபிஷேக் சர்மா

புதுப்பந்தில் பந்து சற்று நின்று வந்தது. ஆனால் பந்தில் பளபளப்பு சென்றதும் சற்று பேட்டிற்கு வந்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக அறிமுகமான இரண்டு பந்துவீச்சார்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது பந்துவீச்சு அருமையாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் நிச்சயம் இந்த குறைகளை கலைந்து அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -