ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த – அபிஷேக் சர்மா

Abhishek Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் இன்று நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்தது.

அபிஷேக் சர்மா நிகழ்த்திய மோசமான சாதனை :

அடுத்து 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 91 ரன்களையும், கிளாஸன் 26 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 40 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடிய அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார்.

இதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளி டி20 போட்டிகளில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகவும் மாறியுள்ளார். அந்த வகையில் அபிஷேக் ஷர்மா நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : இந்த 2026 ஆம் ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 18 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் ஏழாவது முறையாக டக் அவுட்டாகியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தவொரு குறை இருந்தும் ஆர்.சி.பி அசத்தலா விளையாடி வெற்றிபெற்று வராங்க – இர்பான் பதான் பாராட்டு

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலண்டர் ஆண்டில் அதிகமுறை டி20 போட்டிகளில் டக் அவுட்டான இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ஆறு முறை டக் அவுட்டான வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இருந்த வேளையில் இந்த மோசமான சாதனை பட்டியலில் அவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி அபிஷேக் ஷம்மா முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement