ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு அடுத்ததாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து.
ஆர்.சி.பி அணியை பாராட்டிய இர்பான் பதான் :
அந்த வகையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 222 ரன்கள் மட்டுமே குவித்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
ஆர்.சி.பி அணி பெற்ற இந்த வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் பெங்களூரு அணியில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர் இல்லாமலேயே அந்த அணி வெற்றி பெற்று வருவதை இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :
ஆர்.சி.பி அணி ஒவ்வொரு ஓவரையும் ஆராய்ந்து நன்கு திட்டமிட்டு அதற்கு ஏற்றார் போன்று பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெங்களூரு அணியில் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் ஒருவர் இல்லாமலேயே அவர்கள் இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். அதுவும் மிகவும் உறுதியான வெற்றிகளை அவர் பெற்றுள்ளார்கள் என்று பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க : நாளைய கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடுவாரா? – வெளியான தகவல்
அவர் தெரிவித்தது போலவே ஆர்.சி.பி அணி விளையாடிய 4 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறது. அதே வேளையில் 4 போட்டியிலும் 200 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளது. அவர்களுடைய பவுலிங்கில் சிறிய குறைகள் இருந்தாலும் அதை சரி செய்யும் விதமாக ஆர்சிபி அணி கச்சிதமாக செயல்பட்டு வருவது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



