சின்ன தப்பு பண்ணாலும் அதுக்கான தண்டனை கிடைச்சே ஆகும்.. தோல்விக்கு பிறகு – ரியான் பராக் வருத்தம்

Riyan Parag
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

சின்ன தப்பு செய்ஞ்சாலும் தண்டனை கிடைச்சே ஆகும் : ரியான் பராக்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்ததால் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 49 ரன்களையும், துருவ் ஜுரேல் 47 ரன்களையும் குவித்திருந்தனர்.

பெங்களூரு அணி சார்பாக ஜாஷ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கிறோம். ஏனெனில் இந்த மைதானம் 210 முதல் 215 ரன்கள் வரை அடிக்கக்கூடிய மைதானமாகவே இருந்தது.

- Advertisement -

அதனால் மிக சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறோம். அதே போன்று பேட்டிங்கிலும் முதல் 10 ஓவர்கள் வரை நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். இருந்தாலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக இன்டென்ட் காண்பித்து விளையாட முடியாமல் போனது. எங்களுடைய அணி நிர்வாகம் நல்ல சுதந்திரத்தை அளித்திருப்பதால் எங்களால் எங்களது இயல்பான ஆட்டத்தை விளையாட முடிகிறது.

இதையும் படிங்க : 110/2 டூ 194.. சிஎஸ்கே போல 2009க்குப்பின் ராஜஸ்தான் மோசமான சாதனை.. வெற்றியை பறித்த ஆர்சிபி பிளே ஆஃப் உறுதியா?

ஆனாலும் இதுபோன்ற பெரிய தொடரில் சிறிய தவறு செய்தால் கூட அதற்கான தண்டனையை பெற்றே ஆக வேண்டும். ஒரு குழுவாக நாங்கள் நிறைய பேசி வெவ்வேறு சூழ்நிலையில் விளையாடி வந்துள்ளோம். ஆனால் இன்றைய போட்டியில் எங்களால் வெற்றியை நோக்கி செல்ல முடியாமல் போனது. நிச்சயமாக அடுத்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடுவோம் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement