இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
மும்பை அணிக்கெதிரான தோல்விக்கு இதுதான் காரணம் : ரியான் பராக்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரயான் ரிக்கல்டன் 61 ரன்களையும், ரோகித் சர்மா 53 ரன்களையும், சூரியகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ஆர்ச்சர் 30 ரன்களையும், ரியான் பராக் 16 ரன்களையும் குவித்தனர்.
மும்பை அணி சார்பாக ட்ரென்ட் போல்ட் மற்றும் கரண் சர்மா ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனெனில் அவர்களது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஓவருக்கு 10 ரன்கள் வரை விளையாடிய அவர்கள் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடினர். இந்த போட்டியில் 190 முதல் 200 ரன்கள் வரை இலக்கு இருந்திருந்தால் சேசிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஹார்டிக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடி காண்பித்து இலக்கை அதிகமாக்கி விட்டனர்.
இதையும் படிங்க : அவங்கள்ள யாரை பாராட்டுறதுன்னே தெரியல.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடிக்க இதான் காரணம்.. பாண்டியா பேட்டி
எங்கள் அணியை பொறுத்தவரை நல்ல துவக்கம் கிடைத்தாலும் மிடில் ஆர்டரில் நாங்கள் விக்கெட்டுகளை இழப்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. நானும், துருவ் ஜுரேலும் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இன்னும் எங்கள் அணியில் நிறைய சின்ன சின்ன குறைகள் இருக்கின்றன. அதிலெல்லாம் கவனம் செலுத்தி இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.



