ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 50வது போட்டியில் ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 218 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரியன் ரிக்கல்டன் 61, ரோஹித் சர்மா 53, சூரியகுமார் யாதவ் 48*, கேப்டன் பாண்டியா 48* ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தானை ஆரம்ப முதலே துல்லியமாக பௌலிங் செய்து மடக்கிய மும்பை 16.1 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து தொடரிலிருந்து வெளியேற்றியது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்தார். மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், கரண் சர்மா தலா 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
மும்பை வெற்றி:
இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் மும்பை 6 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் இந்த வருடம் மொத்தமாக 10 போட்டியில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதனால் இந்த வருடம் மும்பை 6வது கோப்பையை வெல்லும் என்று அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்டு பாராட்ட முடியாத அளவுக்கு தங்களது அனைத்து பவுலர்களும் அசத்துவதே தொடர் வெற்றிகளுக்குக் காரணம் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அதே போல பேட்டிங்கில் அனைவரும் அசத்துவதாக தெரிவிக்கும் அவர் இது போன்ற சூழ்நிலையில் பணிவுடன் இருந்து தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி பாண்டியா பேசியது பின்வருமாறு.
பணிவுடன் பாண்டியா:
“நாங்கள் பேட்டிங் செய்த விதமும் பந்து வீச்சில் தெளிவாக செயல்பட்ட விதமும் இந்தப் போட்டியை கச்சிதமாக மாற்றியுள்ளது. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் 15 ரன்கள் அடித்திருக்கலாம். நாங்கள் ஷாட்டுகளை சராசரியின் சதவீதத்தை பற்றி பேச முயற்சிக்கிறோம். சூர்யாவும் நானும் இங்கே ஷாட்டுகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று பேசினோம். ரோஹித், ரியான் ஆகியோரும் அதே வழியில் பேட்டிங் செய்தனர்”
இதையும் படிங்க: 100 ரன்ஸ்.. 17க்கு 17.. ராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பிய மும்பை டேபிள் டாப்பர்.. 12 வருடம் கழித்து 2வது சாதனை வெற்றி
“இவை அனைத்தும் வீரர்கள் வாய்ப்புகளைப் பெறுவதற்கு பற்றி கிடையாது. சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடுவதைப் பற்றியதாகும். பேட்ஸ்மேன்ஷிப்புக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். ஒரு அணியாக நாங்கள் சிறந்த வழியில் பேட்டிங் செய்தோம். எங்களது பவுலர்களில் யாரைக் குறிப்பிடுவது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அனைவரும் தெளிவாக செயல்பட்டனர். நாங்கள் எளிமையான கிரிக்கெட்டை விளையாடுவதற்கு ஆதரவளித்து அதற்காக வேலை செய்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு போட்டியை எடுத்துக்கொண்டு பணிவுடன் கட்டுப்பாட்டுடன் செயல்பட விரும்புகிறோம்” எனக் கூறினார்.



