இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் போட்டியானது நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
எங்களது தோல்விக்கு இதுவே காரணம் : ரியான் பராக்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 33 ரன்களையும், ரியான் பராக் 25 ரன்களையும் குவித்தனர். பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது :
17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 153 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக குவிண்டன் டி காக் 97 ரன்களையும், ரகுவன்ஷி 22 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் : இந்த மைதானத்தில் 170 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் அது வெற்றிக்கு போதுமான ரன்களாக இருந்திருக்கும். அதைத்தான் நாங்கள் யோசித்தோம். நான் விக்கெட்டின் தன்மையை தெரிந்து கொள்வதற்காக சற்று அவசரப்பட்டு ஆட்டமிழந்து விட்டதாக கருதுகிறேன். இந்த போட்டியில் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.
குவிண்டன் டி காக்கை விரைவில் வீழ்த்தி இருந்தால் ஆட்டம் எங்களது பக்கம் திரும்பி இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. அதேபோன்று மிடில் ஓவர்களிலும் நாங்கள் அவர்களை கட்டுப்படுத்த தவறி விட்டோம். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. கடந்த ஆண்டு நான் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என அணி நிர்வாகத்தினர் நினைத்தனர்.
இதையும் படிங்க : நேரா பாத்தேன்.. தோனி வந்த வெறித்தனத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அதைக்கூட மறந்துட்டாங்க.. அஸ்வின் பேட்டி
ஆனால் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். உண்மையிலேயே டாப் ஆர்டரில் விளையாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு சில விஷயங்களில் நான் முன்னேற்றத்தை தனிப்பட்ட வகையில் செய்தாக வேண்டும் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.



