ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பையை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 53, ரச்சின் ரவீந்திரா 65* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.
அதனால் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இந்த வருடம் 6வது கோப்பையை வெல்லும் பயணத்தை சென்னை வெற்றிகரமாக துவங்கியது. முன்னதாக அந்தப் போட்டியில் ஜாம்பவான் எம்எஸ் தோனி அன்கேப்ட் வீரராக சென்னை அணிக்காக களமிறங்கினார். 43 வயதிலும் விக்கெட் கீப்பராக 0.12 நொடியில் சூரியகுமாரை அவர் அபாரமாக ஸ்டம்பிங் செய்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தோனிக்கு மெகா வரவேற்பு:
அத்துடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவருக்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே வெறித்தனமாக விசிலடித்து உச்சக்கட்ட வரவேற்ப்பை கொடுத்தனர். மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் என்ற பாட்டை போட்டு தோனிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கிய தோனி 2 பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் எடுக்கவில்லை.
இந்நிலையில் எம்எஸ் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது சேப்பாக்கத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடியதை முதல் முறையாக சென்னை அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து பார்த்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் தோனி வந்ததை கொண்டாடிய ரசிகர்கள் போட்டி இன்னும் முடியவில்லை என்பதையே மறந்து விட்டதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
வெறித்தனமான ரசிகர்கள்:
“எம்எஸ் தோனி சென்னையில் பேட்டிங் செய்ய வந்த போது ஆட்டத்தின் சூழ்நிலை மறந்து போகும் அளவுக்கு சத்தமும் குழப்பமும் ஏற்பட்டது. தோனி ஏராளமான அன்பைப் பெற்றார். தோனிக்கு அப்படிக் கிடைத்த வரவேற்பை முதல் முறையாக நான் சிஎஸ்கே அணியின் உடைமாற்றும் அணியிலிருந்து பார்த்தேன். இதற்கு முன் வெளியில் மற்ற அணியில் தான் பார்த்தேன்”
இதையும் படிங்க: அதுல இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு உயர்த்திய கோலி.. உலகிற்கே உத்வேகமாக இருக்காரு.. ஸ்டோய்னிஸ் பேட்டி
“நான் அடுத்ததாக பேட்டிங் செய்ய நான் தயாராக இருந்தேன். அறைக்குள் சென்று பிட்ச் எப்படி இருக்கிறது என்று ருதுராஜிடம் கேட்டேன். ஏனெனில் அந்த சமயத்திலும் எங்களுக்கு வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அனைவரும் இன்னும் போட்டி முடியவில்லை வெற்றி கிடைக்கவில்லை என்பதை மறந்து விட்டார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சென்னை தங்களது அடுத்த போட்டியில் பெங்களூருவை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.



