அதுல இந்திய கிரிக்கெட்டை வேற லெவலுக்கு உயர்த்திய கோலி.. உலகிற்கே உத்வேகமாக இருக்காரு.. ஸ்டோய்னிஸ் பேட்டி

Marcus Stoinis
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 27000+ ரன்களையும் 82 சதங்களை அடித்துள்ள அவர் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அதே போல ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் ரன்களை தாண்டி ஃபிட்னஸ் எனும் விஷயத்தில் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறியுள்ளார். அந்த வகையில் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டுக்கும் உத்வேகத்தை கொடுப்பவராக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் விராட் கோலியுடன் இருக்கும் நட்பு பற்றியும் இந்திய கிரிக்கெட்டின் ஆழம் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

உத்வேகமாக கிங் கோலி:

“நாங்கள் ஒருவரை ஒருவர் நீண்ட காலமாக அறிவோம். விராட் கோலியை நீண்ட காலமாக அறிந்த நண்பர் பெர்த்தில் இருக்கிறார். அவரது வாயிலாகவே எங்களுடைய நட்புறவு தொடங்கியது. அவருடைய கேரியர் சிறப்பானது. அது இன்னும் முடியவில்லை. இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவர் தனது வாழ்நாள் முழுவதும் சில தொப்பிகளை அணிந்திருப்பது போல் இருக்கிறது”

“இளம் வயதிலேயே இந்திய அணிக்குள் நுழைந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது திறமையால் கேப்டனாக முன்னேறினார். அந்த வாய்ப்பில் கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட்டின் மொத்த கலாச்சாரத்தையும் மாற்றிய அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார். பின்னர் ஃபிட்னெஸ் பக்கத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய அவர் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறார்”

- Advertisement -

ஸ்டோய்னிஸ் பாராட்டு:

“தற்போது அவர் குடும்பத்தையும் கொண்டுள்ளார். இந்த அனைத்துக் கட்டங்களிலும் அவர் தனக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கிரிக்கெட் சமூகத்திற்கும் வழிகாட்டியாக திகழும் வகையில் இருந்துள்ளார். எனவே உண்மையாக சொல்ல வேண்டுமெனில் அவருக்கு எப்போதும் வாழ்த்துக்கள். இந்திய கிரிக்கெட்டின் ஆழம் சிறப்பாக இருக்கிறது”

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் அந்த முடிவை எடுத்ததே ஷ்ரேயாஸ் ஐயர் தான்.. அதனால் தான் ஜெயிச்சோம் – பாண்டிங் பேட்டி

“அங்கே அவர்களுக்கு உலக அரங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் ஐபிஎல் தொடரில் தங்களது கேரியரின் ஆரம்பத்திலேயே அழுத்தமான போட்டிகளில் விளையாடுவதால் பெரிய தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள். ஐபிஎல் தொடரிலும் இந்திய அணிக்காகவும் அவர்கள் பயமின்றி விளையாடுவதை பார்ப்பது சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement