குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்தது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாகியுள்ளதால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் தான் அந்த முடிவை எடுத்தார் : ரிக்கி பாண்டிங்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து 243 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி குஜராத் டைட்டன்ஸ் அணியும் அதிரடியாக விளையாடி வெற்றியினை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது.
ஒரு கட்டத்தில் கடைசி 6 ஓவருக்கு 75 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் குஜராத் அணியிடம் எட்டு விக்கெட்டுகள் எஞ்சியிருந்தன. இதன் காரணமாக குஜராத் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. அப்படி ஒரு சூழலில் இம்பேக்ட் வீரராக களத்திற்கு வந்த வைஷாக் விஜயகுமார் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார்.
அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் 10 ரன்களையும், மூன்றாவது ஓவரில் 18 ரன்கள் என மூன்று ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் : நான் இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் ஓய்வறையில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
குஜராத் அணியின் வெற்றிக்கு ஒரு கட்டத்தில் ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டபோது என்ன செய்யலாம் என ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்டேன். அதற்கு அவர் வைசாக் விஜயகுமாரை இம்பேக்ட் ப்ளேயராக அனுப்புங்கள் அவர் வந்தால் சரியாக இருக்கும். ஏனெனில் கடைசி கட்டத்தில் அவரால் யார்க்கர் பந்துகளை வீசி போட்டியை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கூறினார்.
இதையும் படிங்க : இது சும்மா ட்ரைலர் தான்.. இனிமே தான் மெயின் பிச்சரே இருக்கு.. வெற்றிக்கு பின் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
அவர் சொன்னபடியே வைஷாக் விஜயகுமாரை நாங்கள் உள்ளே அனுப்பினோம். பின்னர் எங்களால் போட்டியில் வெற்றி பெறவும் முடிந்தது என ஷ்ரேயாஸ் ஐயரின் அந்த முடிவினை பாண்டிங் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



