குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நியூ சண்டிகர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபர் போட்டியில் விளையாடியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 214 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இந்த தொடரின் எலிமினேட்டர் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் நேற்றைய போட்டியில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை அளித்திருந்தது.
குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : ரியான் பராக் பேச்சு
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 219 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது : இந்த போட்டியில் 215 ரன்கள் வரை அடித்தது நல்ல ஸ்கோராகவே நினைக்கிறோம். இந்த ரன்களை வைத்து நிச்சயம் குஜராத் அணியை நிறுத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால் முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சின் போது பந்து பேட்டுக்கு நன்றாக சென்றது.
ஒரு கட்டத்தில் 230 ரன்கள் வரை நாங்கள் அடிக்கும் சூழல் இருந்தும் போட்டியின் பிற்பாதியில் எங்களால் பெரிய ரன்களை அடிக்க முடியவில்லை. ஒருவேளை நாங்கள் அந்த 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் 230-240 ரன்கள் வரை கிடைத்திருக்கும். ஆனால் இந்த போட்டியில் 215 ரன்கள் மட்டுமே இலக்கு என்பதனால் குஜராத் அணியின் துவக்க வீரர்களை விரைவாக வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க : சாய் சுதர்சன் கைக்கு டேப் ஒட்டப்போறேன்.. ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு – சுப்மன் கில் பேச்சு
ஆனால் அது நடக்காமல் போனது இப்படி துவக்க வீரர்களை ஆட்டம் இழக்காமல் விளையாட வைத்தால் ஜெயிப்பது மிகவும் கடினம் தான். குஜராத் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியில் வெற்றி பெற்றனர் என்று சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



