- Advertisement -
ஐ.பி.எல்

14 போட்டியிலும் கண்டிப்பா ஆடுவ.. இதை மட்டும் பண்ணு.. வைபவ் சூர்யவன்ஷிக்கு – ரியான் பாரக் கொடுத்த அட்வைஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு நான் கொடுத்த அட்வைஸ் : ரியான் பராக் பேட்டி

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை கையிலெடுத்து 12.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அட்வைஸ் குறித்தும் போட்டிக்கு பின்னர் சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு வாக்குறுதியை வழங்கினேன். அதாவது இந்த தொடரின் 14 போட்டியிலும் நீ கண்டிப்பாக விளையாடுவாய்.

எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன்னுடைய இயல்பான அதிரடியான ஆட்டத்தில் நீ தொடர வேண்டும். நாங்கள் நீ எப்படி ஆடினாலும் உன் மீது எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க மாட்டோம். அதேபோன்று சமூகவலைதளத்தில் வரும் விமர்சனத்தையும் நீ கண்டுகொள்ள வேண்டாம். எங்களுக்கு தேவையெல்லாம் நீ மைதானத்திற்கு சென்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் அது மட்டும் தான் என்று கூறியிருந்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : கேக் பூசுவாங்கன்ற பயத்தால் நான் தூங்கிட்டேன்.. தனது 15 ஆவது பிறந்தநாள் குறித்து – வைபவ் சூர்யவன்ஷி பேட்டி

அதேபோன்று எங்கள் அணியின் பயிற்சியாளர்களிடமும் அவர் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய விரும்பினாலும் அவரை பயிற்சி செய்ய அனுமதியுங்கள். அவர் நிறைய பேட்டிங் செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறார். எனவே அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அந்த வகையிலேயே அவர் முதல் போட்டியிலேயே மிகச் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்ததில் மகிழ்ச்சி என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -