2023-ல் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து மீண்டும் பாராட்ட வைத்த ரியான் பராக் – விவரம் இதோ

Riyan Parag
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ரியான் பராக் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 57 ரன்களையும், ரகுவன்சி 44 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பாக ஆர்ச்சர், தீக்ஷனா, ரியான் பராக், யுத்வீர் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. இதன்காரணமாக கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 95 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதிலும் குறிப்பாக மொயின் அலி வீசிய 13 வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்த அவர் அடுத்ததாக வருண் சக்கரவர்த்தியின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் பதிவிட்டுள்ள ஒரு கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

அதாவது ரியான் பராக் கடந்த 2023-ஆம் ஆண்டின் போது வெளியிட்டிருந்த ஒரு பதிவில் : தான் ஐபிஎல் தொடரில் ஒருநாள் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்களை அடிக்க முடியும் என்று தனது உள்மனம் சொல்வதாக தெரிவித்திருந்தார். அந்த கருத்திற்கு பதில் கொடுத்திருந்த நெட்டிசன்கள் பலரும் அவரின் இந்த கருத்திற்கு கிண்டலான பதில்களை தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க : அந்த ரெண்டையும் கலந்து ஸ்டுப்பிட் மாதிரி பேசாதீங்க.. இந்தியாவின் கவாஸ்கரை சாடிய மியான்தத், பசித் அலி

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் நான்கு சிக்ஸர்கள் மட்டுமில்லாமல் ஆறு சிக்ஸர்களையும் அடித்து தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தனது பேட்டின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடி வரும் ரியான் பராக் இனியும் இந்திய டி20 அணியுடன் தொடர்ச்சியாக பயணிப்பார் என்பது உறுதி.

Advertisement