எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை 2008 முதல் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அப்போதும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை. அதனால் 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா நிறுத்தியது. அதனாலேயே 2023 ஆசிய மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் விளையாடி வெற்றியும் கண்டது.
அந்த சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் செய்தனர். அதில் 26 அப்பாவி இந்திய மக்கள் இயற்கையை எய்தியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதனால் கோபமடைந்த இந்திய அரசாங்கம் சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தியது முதல் யூடியூப் சேனல்களை தடை செய்தது வரை பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கவாஸ்கர் கோரிக்கை:
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2025 ஆசிய கோப்பை இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான் தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய பதற்றமான சூழ்நிலையால் பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடாது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
எனவே பாகிஸ்தான் வரவில்லையெனில் அவர்களை இந்தியா தூக்கி விட்டு ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளை வைத்து புதிய தொடரை நடத்துமாறு பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை வைத்திருந்தார். இதனால் ஆசிய கவுன்சில் கலைக்கப்பட்டாலும் கவலைப்படாதீர்கள் என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக கலந்து கவாஸ்கர் பேசுவது சரியல்ல என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் தெரிவித்துள்ளார்.
கொதித்த பாக் வீரர்கள்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சன்னி பாய் இதை சொன்னார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பூமியை போல் பணிவான மரியாதைக்குரிய அவர் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். இது பற்றி முன்னாள் வீரர் பசித் அலி பேசியது பின்வருமாறு. “கவாஸ்கர் சொன்னது முற்றிலும் முட்டாள்தனமான (ஸ்டுப்பிட்) கருத்து”
இதையும் படிங்க: 2006இல் எனக்கு டிராவிட் சொன்னதை பண்ட் செய்யனும்.. தோனிக்கு ஃபோன் பண்ணி பேசுங்க.. சேவாக் 2 அட்வைஸ்
“முதலில் விசாரணைகள் முடியட்டும். கிரிக்கெட் எப்போதும் அரசியல் ரீதியான விஷயங்களுக்கு மேலே இருக்க வேண்டும்” என்று கூறினார். அதே போல கவாஸ்கர் கருத்து பற்றி மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் முஸ்தாக் அஹ்மத் “எப்போதும் கோபத்தில் முடிவுகளை எடுக்காதீர்கள். அது உங்களை வருத்தமடைய வைக்கும்” என்று கூறினார்.



