36/3 என திணறிய ராஜஸ்தான்.. 4, 4, 6, 4, 6 மாஸ் ஃபினிஷிங் செய்த ரியன் பராக்.. கிண்டல்களை உடைத்து சாதனை

Riyan Parag
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. டெல்லி அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரராக ரிசப் பண்ட் சாதனை படைத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய ஜெய்ஸ்வால் 5 (7) ரன்களில் முகேஷ் குமார் வேகத்தில் கிளீன் போல்டானார். அந்த நிலைமையில் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி 15 (14) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் திணறாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லரும் 11 (16) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அசத்திய பராக்:
அதனால் 36/3 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு 4வது இடத்தில் களமிறங்கிய ரியான் பராகுடன் 5வது இடத்தில் ஆச்சரியப்படும் வகையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார். அந்த வாய்ப்பில் அன்றிச் நோர்ட்ஜெ ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்த அஸ்வின் 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 சிக்ஸருடன் 29 (19) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 34 பந்துகளில் அரை சதமடித்தார். ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் கடந்த 5 வருடங்களில் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டதால் ரசிகர்களின் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளனர். இருப்பினும் இந்த சீசனில் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் அவர் முதல் போட்டியில் 43 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

அதே வேகத்தில் சிறப்பாக விளையாடிய அவர் 17 ஐபிஎல் இன்னிங்ஸ் கழித்து அரை சதமடித்தார். அப்போது வந்த துருவ் ஜுரேல் 20 (12) ரன்களில் அவுட்டானாலும் எதிர்புறம் தொடர்ந்து அசத்திய ரியான் பராக் 20வது ஓவரில் அன்றிச் நோர்ட்ஜெவுக்கு எதிராக 4, 4, 6, 4, 6, 1 என அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து 25 ரன்கள் குவித்து மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: என்ன சொன்னாலும் வயசாகிடுச்சு.. அவரும் தான் அசத்துனாரு.. தோனியை மட்டும் ஏன் கொண்டாடுறீங்க.. சேவாக் கருத்து

அவருடன் ஹெட்மயர் 14* (7) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் ராஜஸ்தான் 185/5 ரன்கள் குவித்து மிரட்டியது. இந்த ஸ்கோர் அடிப்பதற்கு 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 84* (45) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரியான் பராக் ஐபிஎல் தொடரில் தன்னுடைய அதிகப்படுத்த ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தார். இதற்கு முன் 56 ரன்கள் தான் அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில் தன்னை கிண்டல் அடித்தவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement