என்ன சொன்னாலும் வயசாகிடுச்சு.. அவரும் தான் அசத்துனாரு.. தோனியை மட்டும் ஏன் கொண்டாடுறீங்க.. சேவாக் கருத்து

Virender Sehwag MS Dhoni.jpeg
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ஐபிஎல் 2024 டி20 தொடரில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 5 கோப்பைகளை வென்று சென்னை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார். இருப்பினும் 42 வயதை கடந்துள்ள அவர் கடந்த வருடம் முழங்கால் வலியால் அவதிப்பட்டார்.

எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கைக்வாட் கையில் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்த அவர் தற்போது விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார். அதனால் அவர் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பார்க்க முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அந்த நிலையில் குஜராத்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் விஜய் சங்கர் கொடுத்த கேட்ச்சை அவர் பிடித்த விதம் அனைவரையும் வியப்பில் வாழ்த்தியது.

- Advertisement -

வயசான தோனி:
குறிப்பாக டேரில் மிட்சேல் வீசிய பந்தில் விஜய் சங்கர் கொடுத்த கேட்ச்சை 2.27 மீட்டர் தாவிய தோனி 0.60 நொடி ரியாக்சன் டைமிங்கில் அபாரமாக பிடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதனால் 42 வயதானாலும் வயதை வெறும் நம்பராக்கி சிறுத்தையை போல சீறி பாய்ந்து தோனி அபார கேட்ச் பிடித்ததாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் என்ன சொன்னாலும் தோனிக்கு வயதாகி விட்டது என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். மேலும் அதே போட்டியில் தோனியை விட அதிக ஃபிட்டாக உள்ள ரகானேவும் 35 வயதில் பவுண்டரி லைனில் அபார கேட்ச் பிடித்ததாக சேவாக் தெரிவித்துள்ளார். இருப்பினும் தோனியை மட்டும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேட்ச்கள் போட்டிகளை வென்று கொடுக்கும். அஜிங்க்ய ரகானே நல்ல கேட்ச் பிடித்தார். அதே போல ரச்சின் ரவீந்தராவும் செயல்பட்டார். வயதான எம்எஸ் தோனியும் ஒரு கேட்ச் பிடித்தார். ஆனால் அவர்களுடைய வயது ஒன்றல்ல. வித்தியாசம் இருக்கிறது. எம்எஸ் தோனியை விட ரகானேவும் ஃபிட்டாக இருக்கிறார். எனவே 35 வயதுக்கு 41 வயதிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது”

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால், ஜுரேல் மாதிரி 3வதாக.. தரமான இந்திய வீரரை ரெடி பண்ணிட்டோம்.. சங்கக்காரா பேட்டி

“எம்எஸ் தோனி தற்போது வயதாகி விட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை தங்களுடைய அடுத்த போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது. மார்ச் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் சென்னை ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் மும்முரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement