ஜெய்ஸ்வால், ஜுரேல் மாதிரி 3வதாக.. தரமான இந்திய வீரரை ரெடி பண்ணிட்டோம்.. சங்கக்காரா பேட்டி

Kumar Sangakkara
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் விளையாடி வருகிறது. சஞ்சு சாம்சன் தலைமையில் இம்முறையும் களமிறங்கியுள்ள அந்த அணி முதல் போட்டியில் வெற்றி கண்டது. முன்னதாக தரமான இளம் வீரர்களை இந்தியாவுக்கு கண்டறிந்து கொடுக்கும் நோக்கத்துடனேயே ஐபிஎல் துவங்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.

அந்த வகையில் அண்டர்-19 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய யசஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2 வருடங்களாக ராஜஸ்தான் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதன் காரணமாக இந்தியாவுக்காகவும் அறிமுகமகி அசத்திய அவர் தன்னை வருங்கால சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தியுள்ளார். அதே போல கடந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகி அசத்திய துருவ் ஜுரேல் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் தன்னை தரமான வீரர் என்பதை நிரூபிக்கும் அளவுக்கு அட்டகாசமாக விளையாடினார்.

- Advertisement -

3வது தரமான வீரர்:
இந்நிலையில் ஜெய்ஸ்வால், ஜுரேல் வரிசையில் ரியன் பராக்கை 3வது தரமான வீரராக உருவாக்கி வருவதாக ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக 6, 7 போன்ற இடங்களில் சுமாராக விளையாடியதால் விமர்சனங்களை சந்தித்து வரும் ரியன் பராக் இம்முறை லக்னோவுக்கு எதிராக 4வது இடத்தில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 43 (28) ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார்.

எனவே தாமதமானாலும் ரியான் பராக் நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் சங்ககாரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த வருடங்களில் அவருடைய செயல்பாடுகளை நாங்கள் பார்த்தோம். ரியன் போன்றவர் எப்போதுமே அதிக ரன் ரேட் தேவைப்படக்கூடிய கடினமான டெத் ஓவர்களில் விளையாடும் வாய்ப்பை மட்டுமே பெற்றார். எனவே அவர் எங்களுக்காக இன்னும் அதிக முக்கியத்துவமான வேலையை செய்ய முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்”

- Advertisement -

“கடின உழைப்பும் தொடர் துவங்குவதற்கு முன்பாக உள்ளூரில் குவித்த ரன்களும் தான் அவர் மேல் வரிசையில் களமிறங்குவதற்கான முடிவை எடுத்ததில் பங்காற்றியது. வீரர்கள் எப்போதும் நம்பிக்கைக்கு திருப்பி செலுத்த வேண்டும். இம்முறை அவர் ஒரு சிறந்த துவக்கத்தை பெற்றுள்ளார். நம்பர் 4வது இடத்தில் என்ன செய்ய முடியும் என்று அவர் தன்னை நம்ப வேண்டும். வேகம் மற்றும் சுழலுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதால் இந்த இடம் அவருக்கு ஏற்றது”

இதையும் படிங்க: தோல்விக்கு பின்னரும் மற்ற அணிகளை கம்பேர் செய்து ஓய்வறையில் வீர வசனம் பேசிய – ஹார்டிக் பாண்டியா

“சில நேரங்களில் பழைய ஸ்டைலில் கடினமாக வேலை செய்வதும் உங்களுக்கு பலனளிக்கும். அதையே ஜெய்ஸ்வால் மற்றும் ஜுரேல் செய்தனர். இது வெறும் ஆரம்பம் மட்டுமே. வருங்காலங்களில் அவர்கள் கடினமான சூழல்களை சந்திப்பார்கள். அப்போது அணிகள் நல்ல வேலை செய்யும் போது அவர்கள் தங்களை மறுசீரமைக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக அவர்கள் சரியான பாதையில் நடப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement