கேட்ச் பிடிப்பதில் ரோஹித் சர்மா, ஜடேஜாவின் ஆல் டைம் சாதனையை தகர்த்த இளம் வீரர் – முழு விவரம்

Riyan Parag Catch
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் சூடு பிடித்துள்ள நிலையில் மே 20-ஆம் தேதி நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்த ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் தைரியமாக பேட்டிங் செய்தாலும் 20 ஓவர்களில் வெறும் 150/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் அந்த அணிக்காக 3-வது இடத்தில் களமிறங்கி ஒவ்வொரு பந்திலும் சரவெடியாக பேட்டிங் செய்த மொயின் அலி பவர்பிளே ஓவர்களில் ராஜஸ்தான் பவுலர்களை பிரித்து மேய்ந்து ரன்களை குவித்தார். ஒவ்வொரு பந்திலும் அட்டகாசமான பேட்டிங்கைத் வெளிப்படுத்திய அவர் 13 பவுண்டரி 3 சிக்சருடன் 93 (57) ரன்கள் எடுத்து சதமடிக்க முடியாமல் கடைசி ஓவரில் போராடி ஆட்டமிழந்தார்.

MS Dhoni Ravi Ashwin

- Advertisement -

ஆனால் ருதுராஜ் கைக்வாட் 2 (6) டேவோன் கான்வே 16 (14) ஜெகதீசன் 1 (4) ராயுடு 3 (6) என எதிர்ப்புறம் வந்த அத்தனை பேட்ஸ்மேன்களும் அவருக்கு கொஞ்சம் கூட கை கொடுக்காமல் பெவிலியன் திரும்பி பின்னடவை கொடுத்தனர். அதனால் 95/4 என சரிந்த சென்னைக்காக மெதுவாக பேட்டிங் செய்த தோனியும் 26 (28) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதிலும் முதல் 6 ஓவர்களில் 75/1 ரன்களை எடுத்து சென்னை அடுத்த 14 ஓவர்களில் 75/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் கலக்கல்:
அந்த அளவுக்கு பவர்பிளே ஓவர்களுக்கு பின் அற்புதமாக பந்துவீசிய ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 151 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (44) ரன்கள் எடுத்து 15 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 2 (5) சஞ்சு சாம்சன் 15 (20) தேவ்தூத் படிக்கல் 3 (9) என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதிலும் கடைசி நேரத்தில் சிம்ரோன் ஹெட்மையர் 6 (7) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Yashsvi Jaiswal

ஆனாலும் யாரும் எதிர்பாராத வகையில் 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்ட தமிழகத்தின் அஸ்வின் 40* (23) ரன்கள் குவித்து அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவரில் 151/5 ரன்களை எடுத்து ராஜஸ்தான் வென்றது. இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் 1 விக்கெட் பேட்டிங்கில் முக்கியமான 40* ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அஸ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

சென்னை பரிதாபம்:
அதைவிட இந்த முக்கியமான வெற்றியால் பங்கேற்ற 14 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் கூடுதல் ரன்ரேட் பெற்று அதே 18 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்தது. அதனால் மே 24இல் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் முதலிடம் பிடித்த குஜராத்தை அந்த அணி சந்திக்கிறது. மறுபுறம் மொயின் அலி கொடுத்த அற்புதமான தொடக்கத்தை மொத்தமாக கோட்டைவிட்ட சென்னை பந்துவீச்சில் போராடிய போதிலும் கடைசி போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் பரிதாப தோல்வியை சந்தித்தது.

CSK Matheesa Pathirana

அத்துடன் ஏற்கனவே 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமலும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்ட அந்த அணி பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து பரிதாபமாக வீட்டுக்கு திரும்பியது.

- Advertisement -

ரியன் பராக்:
முன்னதாக இந்த போட்டியில் சென்னை முதலில் பேட்டிங் செய்த போது ஜெகதீசன், மொய்ன் அலி ஆகியோர் கொடுத்த கேட்ச்களை அற்புதமாக பிடித்த ராஜஸ்தான் இளம் வீரர் ரியன் பராக் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத இந்திய வீரர் என்ற ரவீந்திர ஜடேஜா, ரோஹித் சர்மா ஆகியோரின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ரியன் பராக் : 15 கேட்ச்கள் (2022)*
2. ரவீந்திர ஜடேஜா : 13 கேட்ச்கள் (2015)
3. ரவீந்திர ஜடேஜா : 13 கேட்ச்கள் (2021)
4. ரோஹித் சர்மா : 13 கேட்ச்கள் (2012)

Riyan

மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக கேட்ச்களை பிடித்த 2-வது வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஏபி டீ வில்லியர்ஸ் : 19 (2016)
2. ரியன் பராக் : 15* (2022)
3. கைரன் பொல்லார்ட் : 15 (2017)

- Advertisement -

அத்துடன் ராஜஸ்தானுக்காக ஒரு சீசனில் அதிக கேட்ச்கள் பிடித்த ஃபீல்டராகவும் சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ரியான் பராக் : 15* (2022)
2. சஞ்சு சாம்சன் : 15 (2013)
3. அஜிங்கிய ராஹானே : 11 (2012)

இதையும் படிங்க : தோனி எடுத்துள்ள அந்த முடிவு மிகச்சரியானது. இந்தியாவுக்கே நன்றி சொல்லலாம் – கவாஸ்கர் கருத்து

இந்த வருடம் சென்னை உட்பட நிறைய அணிகள் கேட்ச்களை கோட்டை விட்டதால் அதோடு வெற்றிகளையும் எதிரணிக்கு பரிசளித்ததை பார்த்தோம். அவர்களுக்கு மத்தியில் 20 வயதிலேயே கச்சிதமாக செயல்பட்டு டிவிலியர்ஸ் க்கு அடுத்து சாதனை படைத்துள்ள ரியான் பராக் உண்மையில் பாராட்டக்குரியவராகிறார்.

Advertisement