தோனி எடுத்துள்ள அந்த முடிவு மிகச்சரியானது. இந்தியாவுக்கே நன்றி சொல்லலாம் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் துவக்கம் முதலே தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணியானது இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் தங்களது 10 ஆவது தோல்வியை பெற்றிருந்தனர்.

MS Dhoni Ravi Ashwin

இதன் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து 9-வது இடத்தை பிடித்து சிஎஸ்கே அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டி சென்னை அணிக்கு கடைசி லீக் போட்டியில் என்பதனால் டாசின் போது தோனியிடம் இதுதான் உங்களது கடைசி போட்டியா? அடுத்த ஆண்டிற்கான உங்களது திட்டம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த தோனி கூறுகையில் : நிச்சயம் நான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். சென்னை ரசிகர்களுக்காக அவர்களது மத்தியில் நான் விளையாடாமல் சென்றுவிட்டால் அது நியாயமாக இருக்காது. நான் நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடி நன்றி சொல்லி தான் விடை பெறுவேன் என்று தோனி கூறியுள்ளார்.

Bishop

இதன் காரணமாக அடுத்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தோனியின் இந்த முடிவினை வரவேற்று பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில் : தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று கூறியது ஒரு சிறப்பான விஷயமாகும். அவரது இந்த முடிவினை அற்புதமான ஒரு முடிவாக நான் பார்க்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் அவருக்கும் அந்த அணிக்கும் ஆதரவு தெரிவித்த ரசிர்களுக்கு தோனி நேரில் நன்றி சொல்ல விரும்புகிறார். இந்திய அணியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற கேப்டனான தோனி நிச்சயம் இந்தியாவுக்கே நன்றி சொல்ல வேண்டும். அந்த வகையில் அடுத்த ஆண்டு அவர் கிட்டத்தட்ட பத்து மைதானங்களில் விளையாடுவார்.

இதையும் படிங்க : தோனி மட்டும் இதை பண்ணாம இருந்திருந்தா ராஜஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கலாம் – ரசிகர்கள் காட்டம்

எனவே அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி கூறி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே நன்றி தெரிவித்தபடி அவர் ஓய்வு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே தோனி எடுத்துள்ள இந்த முடிவு மிகச்சரியான ஒன்று என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement