தோனி மட்டும் இதை பண்ணாம இருந்திருந்தா ராஜஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கலாம் – ரசிகர்கள் காட்டம்

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நேற்று தங்களது கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் 150 ரன்களை மட்டுமே குவித்த சென்னை அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி பெறும் பத்தாவது தோல்வி இதுவாகும். அதோடு இந்த தொடரிலும் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து சிஎஸ்கே அணி வெளியேறியுள்ளது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டிலாவது சென்னை அணி 6 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது. ஆனால் இம்முறை 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்ததால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் முதல் ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனாலும் மொயின் அலியின் அற்புதமான ஆட்டம் காரணமாக சென்னை அணி பவர் பிளே ஓவர்களான 6 ஓவர்கள் முடிவில் 75 ரன்கள் அடித்தது. பின்னர் மீதமுள்ள 14 ஓவர்களில் அதாவது 84 பந்துகளில் 75 ரன்கள் மட்டுமே குவித்ததால் இறுதியில் 150 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த பொறுமையான ஆட்டமே சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

Moin Ali MS DHoni

அதிலும் குறிப்பாக 10 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 90 ரன்களுக்கும் மேல் இருந்த வேளையில் ராயுடு ஆட்டம் இழந்ததும் களமிறங்கிய தோனி 11-வது ஓவரில் இருந்து 19-வது ஓவரின் இறுதி பந்து வரை தோனி விளையாடினார். மொத்தமாக 28 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தாலும் 26 ரன்களை மட்டுமே அடித்தார். இப்படி அவர் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது தான் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர் மட்டும் இப்படி செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும்.

- Advertisement -

அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் தடுப்பாட்டம் ஆட முயற்சித்தது சரிதான். 15வது ஓவர் வரை நிதானமாக விளையாடியதை ஒப்புக் கொள்ளலாம். அதன் பிறகு கடைசி 5 ஓவர்களில் கூட பெரிய அளவில் பெரிய ஷாட் விளையாடவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் தோனியின் இந்த பொறுமையான இன்னிங்ஸ் தான் தோல்விக்கு காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐ.சி.சி யை விட அதிகம் தெரிஞ்சா பேசுங்க. சேவாக்கின் கருத்திற்கு நேரடி பதிலளித்து – எச்சரித்த அக்தர்

ஏனெனில் ஒரு கட்டத்தில் சென்னை அணி விளையாடிய விதத்தை பார்க்கும் போது 200 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டதால் சற்று நிதானமாக விளையாடியது. இருப்பினும் தோனி இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தோனியின் இந்த ஆமை வேக ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement