ஐ.சி.சி யை விட அதிகம் தெரிஞ்சா பேசுங்க. சேவாக்கின் கருத்திற்கு நேரடி பதிலளித்து – எச்சரித்த அக்தர்

Akhtar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இரு தரப்பு தொடரில் நேரடியாக கலந்து கொள்வதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் பொதுவான நாடுகளில் கலந்துகொள்ளும் இவ்விரு அணிகள் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அரசியல் பிரச்சனை காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தொடர்பு தொடரில் மோதுவது கிடையாது.

- Advertisement -

இருப்பினும் இவ்விரு அணிகளும் கூடிய விரைவில் சில போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் கலந்துகொண்டு விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனாலும் இருநாட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெறுமா என்று தெரியவில்லை.

இருந்தாலும் இந்தியா பாகிஸ்தான் என்று எடுத்தாலே கிரிக்கெட்டையும் தாண்டி எப்போதுமே பரபரப்பான ஒரு பேச்சு நிலவி வரும் அந்த வகையில் கிரிக்கெட் போட்டியை தாண்டி தற்போது அக்தர் குறித்து சேவாக் பேசிய விடயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதற்கு அக்தரும் தனது காட்டமான பதிலை வெளிப்படையாக தெரிவித்து சேவாக்கை எச்சரித்துள்ளார்.

Shoaib Akhtar Virender Sehwag

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் குறித்து பேசிய சேவாக் கூறுகையில் : அக்தர் ஓடிவந்து முழங்கையை மடக்கி பந்தினை எறிவார். இல்லையென்றால் அவரை ஏன் ஐசிசி தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து இணையத்தில் பெரிய அளவு வைரலாக அக்தர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பேச ஆரம்பித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் சேவாக்கின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள அக்தர் கூறுகையில் : இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுவதற்கு முன்னர் சேவாக் யோசிக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை அவர் கூற வேண்டாம் என்று நான் கெஞ்சி கேட்கிறேன். சேவாக் ஐசிசி-யை விட விதிமுறைகள் அதிகம் தெரிந்தால் இது பற்றி கருத்து கூறலாம். எனவே கவனமாக பேசும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 வெளிநாட்டு நட்சத்திர பேட்ஸ்மேன்கள்

இருநாட்டு உறவுகளை சிக்கலாக்கும் வகையிலான கருத்துக்களை இருநாட்டு வீரர்களும் சொல்லக்கூடாது. எந்த விடயமாக இருந்தாலும் கவனமாக கருத்துக்களை கூற வேண்டும். சேவாக்கும் இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் நிச்சயம் கவனமாக இருக்கவேண்டும் என்று அக்தர் அவரை எச்சரித்துள்ளார்.

Advertisement