ரோஹித்தை வாழ்த்தி சிஎஸ்கே வெளியிட்ட பதிவுக்கு ரோஹித் மனைவி கொடுத்த பாசமான பதில் – அதிரும் மும்பை இந்தியன்ஸ்

Ritika-Sajdeh
- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதுவரை 10 சீசன்களில் கேப்டன்சி செய்த அவர் மும்பை அணிக்காக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது 36 வயதாகும் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து வாங்கிய ஹார்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

இப்படி ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ரோஹித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியதால் மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடரும் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் அன்பாலோ செய்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும் இப்படி எந்த ஒரு விடயத்தையும் ரோகித்தை கேட்காமல் முடிவெடுத்திருக்கக் கூடாது என்றும் ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ரோகித் சர்மா ஒரு வீரராகவும், ஹார்டிக் பாண்டியா கேப்டனாகவும் செயல்படும் நோக்கில் அவர்கள் இந்த புதிய கேப்டன் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய ரோகித் சர்மாவை பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேளையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமும் ரோகித் சர்மா குறித்து ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தது. அதில் கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல சவாலை அளித்துள்ளீர்கள். உங்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம் ரோஹித் என்று ரோகித் சர்மாவை வாழ்த்தி ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி சிஎஸ்கே வெளியிட்ட பதிவிற்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா கொடுத்த பதில்தான் தற்போது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களையும், அந்த அணியின் நிர்வாகத்தையும் அதிர வைத்துள்ளது. ஏனெனில் சிஎஸ்கே பதிவிட்டு இருந்த இந்த பதிவிற்கு கீழ் ரிப்ளை செய்துள்ள ரித்திகா : மஞ்சள் நிறத்தில் ஹார்டினை பதிலாக கொடுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி விட்டு அணியில் இருந்து வெளியேறும் இந்திய வீரர் – வெளியான தகவல்

பொதுவாகவே சி.எஸ்.கே அணி வெளியிடும் பதிவுகளுக்கு சென்னை அணியின் ரசிகர்கள் மட்டுமே மஞ்சள் நிறத்தில் ஹார்டின் எமோஜிகளை பகிர்ந்து வரும் வேளையில் ரோகித் மனைவியும் மஞ்சள் நிறத்தில் ஹார்டினை பகிர்ந்து உள்ளதால் அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் ஒருவேளை சென்னை அணிக்கு ரோகித் சர்மா மாற இருக்கிறாரோ என்ற கேள்வியையும் இந்த பதில் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement