முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி விட்டு அணியில் இருந்து வெளியேறும் இந்திய வீரர் – வெளியான தகவல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரினை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்த தொடரின் முடிவு கிடைக்காமல் போனது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நாளை டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் துவங்குகிறது.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

ஏற்கனவே இந்த ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்த சில இந்திய வீரர்கள் காயம் காரணமாக விலகிய வேளையில் தற்போது மேலும் ஒரு வீரராக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும்தான் விளையாடுவார் என்றும் அதற்கு அடுத்து எஞ்சிய இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து அவர் வெளியேற உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி வெளியான தகவலில் : ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளதால் அந்த தொடருக்காக தயாராகும் விதத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிட்டு அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்து டெஸ்ட் தொடர்காக தயாராக இருக்கிறாராம்.

இதையும் படிங்க : தெ.ஆ ஒருநாள் தொடரில் ரிங்கு சிங், சஞ்சு சம்சானுக்கு சான்ஸ் கிடைக்குமா? கேப்டன் ராகுல் நேரடி பதில்

அதனால் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமே அவர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் வேறு யாராவது ஒருவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement