இந்திய அணி அதிரடி துவக்க வீரரும், ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனுமான ரோகித் சர்மா கடந்த 2015ஆம் ஆண்டு தனது மேனேஜர் ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பிறந்தது.
அவருடைய குழந்தை பிறக்கும்போது ரோகித்சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய நாட்டின்ல் விளையாடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது குழந்தை மெல்ல மெல்ல வளரத் தொடங்கி உள்ளது. தோனியின் குழந்தையை மட்டும் பிரபலமாக பார்க்கும் ரசிகர்கள் தற்போது ரோஹித்தின் குழந்தையும் பிரபலமாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் ரோகித் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரோஹித்தின் இந்த குழந்தையை கண்ட ரோஹித்தின் ரசிகர்கள் இந்த பதிவினை பெருமளவு பகிர்ந்து வருகின்றனர்.