IND vs ENG : இந்திய வீரரான அவர் எங்க டீம்ல விளையாட வேண்டிய வீரர் – பென் ஸ்டோக்ஸ் புகழாரம்

Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்தியா 15 வருடங்கள் கழித்து அந்நாட்டில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் மண்ணைக் கவ்வ வைத்தது. ஆனால் அதை பினிஷிங் செய்வதற்கு இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா கடைசி நேரத்தில் விலகியதால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

- Advertisement -

அவரது தலைமையில் முதல் 3 நாட்களில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியாவை கடைசி 2 நாட்களில் பந்தாடிய புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது சொந்த மண்ணில் ராஜா என நிரூபித்தது. ட்ரா செய்திருந்தால் கூட தொடரை வென்றிருக்கலாம் என்ற நிலைமையில் விராட் கோலி, ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஷார்துல் தாகூர் என பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறியது இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

தனியொருவன் பண்ட்:
இருப்பினும் இப்போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2 இன்னிங்சிலும் 146, 57 என 203 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடினார். முதல் இன்னிங்சில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 98/5 என திணறிய இந்தியா 200 ரன்களைக் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மிரட்டலாக பந்து வீசிய இங்கிலாந்துக்கே மிரட்டலளிக்கும் வகையில் டி20 இன்னிங்ஸ் போல 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 89 பந்துகளில் சதமடித்து 146 (111) ரன்களை 131.53 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் குவித்த அவர் மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்.

Rishabh Pant Ind vs ENg

சொல்லப்போனால் அவரின் அந்த அற்புதமான பேட்டிங் காரணமாகவே முதல் 3 நாட்களில் இப்போட்டியில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. அவரை தவிர முதல் இன்னிங்சில் 104 ரன்கள் குவித்த ஜடேஜா இப்போட்டியில் ஆல்-ரவுண்டராக பந்துவீச்சில் 1 விக்கெட் கூட எடுக்காமல் சுமாராகவே செயல்பட்டார். அதேபோல் முதல் இன்னிங்சில் சொதப்பிய புஜாரா 2-வது இன்னிங்சில் தனது இடத்தை காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே செயல்பட்டார். மொத்தத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் தவிர வேறு எந்த இந்திய வீரரும் அற்புதமாக செயல்படவில்லை என்பதே நிதர்சனம்.

- Advertisement -

இங்கிலாந்தில் பண்ட்:
இப்போட்டியில் 203 ரன்களைக் குவித்த ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உட்பட ஏராளமான சாதனைகளை படைத்தார். இந்நிலையில் தங்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அற்புதமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணியில் விளையாடுவதற்கு பொருத்தமானவர் என அதன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

Rishabh-Pant

“ரிஷப் பண்ட் இன்னிங்சை பாருங்கள். போட்டியை அவர் விளையாடும் விதத்தை வைத்துப் பார்க்கும் போது தற்சமயத்தில் எங்களது அணியில் விளையாடுவதற்கு பொருந்தக் கூடியவர். கடந்த காலங்களில் நிறைய விமர்சனங்களை சந்தித்த அவர் தற்போது இதுபோல் அதிரடியாக விளையாடுவதால் பாராட்டு மழையில் நனைவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரைப் போன்ற வீரர்களை நிறைய பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட் மீது இருக்கும் எதிர்மறையான கருத்துக்கள் தாமாக அழிந்துவிடும்”

- Advertisement -

“அவரது ஆட்டத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. ஏனெனில் கிரிக்கெட் என்பது போட்டியின் முடிவுகளையும் தாண்டி அதை பார்க்க வரும் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டிய ஒரு தொழிலாகும். அதற்காக நாம் வித்தியாசமான அம்சங்களை செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட்க்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : தல தோனிக்கு வாழ்த்து சொன்ன தமிழ்நாட்டின் தளபதி ஸ்டாலின் – இதற்காகத்தான் வெயிட்டிங்காம்

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் பொறுப்பேற்றதும் அதிரடியாக விளையாட துவங்கியுள்ள இங்கிலாந்து அசால்ட்டான வெற்றிகளை பெற தொடங்கியுள்ளது. எனவே தங்களது அதிரடி படையில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் சரியாக பொருந்துவார் என தெரிவிக்கும் பென் ஸ்டோக்ஸ் அவரைப் போன்றவர்கள் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பதுடன் டெஸ்ட் போட்டிகளை சுவாரசியமானதாக மாற்றி வாழ்வளிக்க கூடியவராகவும் உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

Advertisement