இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையை மீறிய ரிஷப் பண்ட் – அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா ?

Shah
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தற்போது அங்கேயே தங்கி உள்ளது நிலையில் இந்த தொடருக்கு முன்னர் ஒரு மாத காலம் இடைவெளி உள்ளதால் இந்திய வீரர்களுக்கு 20 நாட்கள் கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் ஓய்வு வழங்கப்பட்டது. இதனை அடுத்து வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

INDvsENG 1

- Advertisement -

இதனால் சில வீரர்கள் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ கோப்பை கால்பந்து ஆகிய தொடர்களை நேரில் சென்று கண்டு களித்தனர். இப்படி யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண சென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டார். அண்மையில் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட போதும் அவருக்கு தொற்று உண்டாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதுமட்டுமின்றி யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண சென்ற ரிஷப் பண்ட் அங்கிருக்கும் சில நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா இந்திய வீரர்களுக்கு ஈமெயில் மூலம் ஒரு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

jay shah

அதாவது இங்கிலாந்தில் டெல்டா வகை வைரஸால் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி வீரர்கள் எங்கு சென்றாலும் நெரிசலான இடங்கள் மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தடுப்பூசி பாதுகாப்பு பாதுகாப்பை மட்டுமே வழங்கும் வழங்கும் ஆனால் வைரசுக்கு எதிராக முழுவதுமாக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்காது என்று வீரர்களை எச்சரித்துள்ளார்.

Pant

மேலும் அவரது அந்த ஈமெயிலில் விம்பிள்டன் டென்னிஸ், யூரோ கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றை நேரில் சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவுறுத்தலையும் மீறி ரிஷப் பண்ட் கால்பந்து போட்டியை பார்க்க சென்றுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement