எங்க டீமோட பவுலர்ஸ்ஸை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. வெற்றிக்கு பிறகு ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

Pant
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 221 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65 ரன்களையும், பிரேசர் மெக்கர்க் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி இறுதிவரை போராடி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தலான வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பாக சஞ்சு சாம்சன் 86 ரன்களையும், ரியான் பராக் 27 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை எங்களுக்கு சாதகமாக திருப்பி உள்ளனர். பந்துவீச்சாளர்கள் இப்படி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதை பார்க்க அருமையாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் பல்வேறு விடயங்களை கற்று வருகிறோம்.

இதையும் படிங்க : நியாயத்தை கேட்ட சஞ்சு சாம்சன்.. பதிலுக்கு அதிரடி தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்.. ரசிகர்கள் கோபம்

வெற்றியோ தோல்வியோ அதில் கிடைக்கும் பாடங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. குல்தீப் யாதவ் எப்போதுமே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்று முடியும் என்று எதிர்பார்த்தோம். அதேபோன்று நெருக்கமாகவே சென்று முடிந்துள்ளது. இருப்பினும் 200 ரன்களில் அவர்களை சுருட்டியதில் மிகவும் மகிழ்ச்சி என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement