நம்பர் 3 ஆவது இடத்தில விளையாட இவர்தான் சரியான வீரர்.. லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் – ரிஷப் பண்ட் அளித்த பேட்டி

Pant
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது லக்னோ அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்து தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இரண்டு வெற்றிகளுடன் பத்தாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த வெற்றி உண்மையிலேயே எங்களுக்கு ஒரு ஆறுதலை அளித்துள்ளது.

இந்த வெற்றியை தேடித்தான் நாங்கள் இவ்வளவு நாட்கள் காத்திருந்தோம். நான் எப்போதுமே எங்கள் அணியின் வீரர்களிடம் கூறுவது ஒன்றுதான். நாம் சாம்பியன் அணி அதனை கணக்கில் வைத்து விளையாடுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தேன். அதேபோன்று ஒவ்வொரு போட்டியின் போதும் மிகக் கடுமையாக போராட வேண்டும் என்றும் நான் கூறிக் கொண்டே இருந்தேன்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதுமட்டும் இன்றி ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் தங்களது பங்களிப்பினை உணர்ந்து சரியாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஒரு குழுவாக நாங்கள் இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தற்போது உள்ள பிளேயிங் லெவனை மிகச் சிறப்பான பிளேயிங் லெவனாக நான் கருதுகிறேன்.

இதையும் படிங்க : அதனால தான் அவர் தல.. கேப்டனா இல்லனாலும் தோனியிடம் அந்த பவர் இருக்கு.. கவாஸ்கர் கருத்து

எங்களது அணியில் சில வீரர்களுக்கு காயம் காரணமாக வெளியில் இருக்கும் வேளையில் தற்போது அணியில் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இம்முறை ஜாக் பிரேசர் எங்கள் அணிக்குள் வந்துள்ளது மூன்றாவது வீரரை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்த வெற்றி தொடரும் என்று நினைப்பதாக ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement