அதனால தான் அவர் தல.. கேப்டனா இல்லனாலும் தோனியிடம் அந்த பவர் இருக்கு.. கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar 4
- Advertisement -

கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி பரம எதிரிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை மற்றும் சென்னை அணிகள் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மோதும் இந்தப் போட்டிக்கு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த வருடம் முதல் முறையாக தலா 5 கோப்பைகளை கேப்டன்களாக வென்ற எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாதாரண வீரர்களாக விளையாட உள்ளனர். அதில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை வலுக்கட்டாயமாக கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது அந்த அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

- Advertisement -

தல தோனி:
ஆனால் 42 வயதாகும் தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்தது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மும்பையில் பிறந்த தாம் எப்போதும் தோனிக்காக சிஎஸ்கே அணிக்கு ஆதரவு கொடுத்து வருவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கு தோனி முக்கிய காரணம் என்றும் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

அதனாலேயே அவர் தல என்று அழைக்கப்படுவதாக கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் இம்முறை கேப்டனாக இல்லாமல் போனாலும் முக்கிய வீரராக இருந்து சென்னைக்கு கோப்பையை வென்று கொடுக்கும் திறமை தோனியிடம் இருப்பதாக கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஆதரவு கொடுக்க 2 அணிகள் இருக்கிறது. ஏனெனில் நான் மும்பையைச் சேர்ந்தவர்”

- Advertisement -

“அதனால் மும்பை. பின்னர் சிஎஸ்கே. சென்னை அணி தொடர்ச்சியாக அசத்துவதற்கு தோனி முக்கிய பங்காற்றுகிறார். அதனாலயே ரசிகர்கள் சொல்வது போல அவர் தல. ஐபிஎல் தொடரில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு நகரங்களில் இருந்து வீரர்கள் விளையாடுவார்கள். அவர்களை ஒன்றிணைத்து ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்கை நீங்கள் உருவாக்க வேண்டும்”

இதையும் படிங்க: இதை மட்டும் செஞ்சா பாண்டியாவின் 2024 டி20 உ.கோ இடம் துபேவுக்கு கிடைச்சுரும்.. மனோஜ் திவாரி ஓப்பன்டாக்

“இன்னும் 6 வாரங்களில் நாம் இந்த தொடரை வெல்ல வேண்டும். அதற்கு உங்களுக்கு சில மகத்தான வீரர்கள் தேவைப்படலாம். அணியின் கலவைக்காக சில வீரர்களை பெஞ்சிலும் அமர வைக்கலாம். ஆனால் அவர்கை நீங்கள் பயனற்றவர்கள் என்று உணர வைக்கக்கூடாது. அவர்களை நீங்கள் அணியின் முக்கிய நபர்களாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அவற்றை செய்யக்கூடிய திறன் எம்எஸ் தோனியிடம் இருக்கிறது. அதனாலேயே அவரை தல என்று அழைக்கின்றனர்” என கூறினார்.

Advertisement