ஒருவேளை மீண்டும் இந்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் திருப்பி அடிப்பேன் – ஆட்டநாயகன் பண்ட் அதிரடி

Pant-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவிக்க அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 365 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

cup

- Advertisement -

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 118 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 101 ரன்களை விளாசினார். அவரது இந்த அதிரடியான ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இக்கட்டான நேரத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு திருப்பியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

முதல் இன்னிங்ஸ்ஸின் போது இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது களமிறங்கிய ரிஷப் பண்ட் துவக்கத்தில் நிதானமாக விளையாடியும், பின்னர் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்புக்கு பெரிதும் உதவினார். அவருடன் இணைந்த தமிழக இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை சிறப்பான ரன் குவிப்பு நோக்கி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்றதும் தனது பேட்டிங் குறித்து பேசிய ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த போட்டியில் எனது எனது சிறப்பான ஆட்டத்திற்கு நான் எடுத்த பயிற்சியே காரணம். மேலும் என்னுடைய தன்னம்பிக்கை எனக்கு பெருமளவு உதவியது. நான் என்மீது வைத்த நம்பிக்கையை அப்படியே எனது பேட்டிங் மற்றும் கீப்பிங் செலுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.

- Advertisement -

அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது நாம் நம்பிக்கையுடன் விளையாட வேண்டியது மிக முக்கியமான விடயம். அந்த வகையில் இந்திய அணி 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக விளையாடி உள்ளேன். இதை தவிர வேற எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை எனக்கு வேகப்பந்து வீச்சில் ரிவர்ஸ் பிலிக் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அடிப்பேன் என்றும் ரிஷப் பண்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

pant-1

கடந்த சில தொடர்களாகவே அதிரடியில் அசத்தி வரும் ரிஷப் பண்ட் முன் போன்று இல்லாமல் தற்போது பொறுப்புடன் விளையாடி சரியான ஷாட்களை தேர்வு செய்து விளையாடி வருகிறார். அதன் காரணமாக அவரது பேட்டிங் தற்போது மிகவும் மேம்பட்டுள்ளது. பேட்டிங்கில் கிடைக்கும் வெற்றியின் மூலமாக அவரால் விக்கெட் கீப்பிங் மேலும் சிறப்பாக செயல்பட முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement