கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சூப்பர் ஓவர் வரை சென்று கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை குவித்தது.
சூப்பர் ஓவரில் நிக்கோலஸ் பூரானை களமிறக்கியது ஏன்? : ரிஷப் பண்ட் விளக்கம்
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியும் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து சரியாக 155 ரன்களை குவித்தது. அதன் காரணமாக இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது :
இந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது. இந்த ஓய்வில் நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற லோ ஸ்கோரிங் போட்டிகளில் எப்போதுமே அதிக அழுத்தம் இருக்கும். அதே வேளையில் இந்த போட்டியில் நாங்கள் அனைவரும் சரியாக செயல்பட்டிருக்க வேண்டியது அவசியம். அணியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை சரியாக வழங்க வேண்டும்.
ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் சரியாக விளையாடியிருந்தால் கூட இந்த போட்டியை ஜெயித்திருக்கலாம். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் எடுத்த முடிவுகள் தவறாக மாறியது. பூரானை சூப்பர் ஓவருக்கு களமிறக்க காரணம் யாதெனில் : இந்த போட்டி டிராவில் முடிந்ததும் உடனடியாக நாங்கள் ஒரு ஆலோசனையை நடத்தினோம். அந்த ஆலோசனை கூட்டத்தில் சூப்பர் ஓவரில் களமிறக்க நிக்கோலஸ் பூரான் சரியான நபர் என்றும் முடிவெடுத்தோம்.
இதையும் படிங்க : லக்னோ அணிக்கெதிராக நாங்கள் பெற்ற இந்த அசத்தலான வெற்றிக்கு இவர் மட்டும் தான் காரணம் – ரஹானே பாராட்டு
ஏனெனில் அவர் தற்போது மோசமான பார்மில் இருந்தாலும் இது போன்ற கடினமான சூழலில் அதிரடியான ஒரு வீரரை இறக்க வேண்டும். அதன் காரணமாகவே அந்த முடிவை எடுத்தோம். இறுதியில் அந்த முடிவும் தவறாக மாறியுள்ளது. இருந்தாலும் இதுபோன்ற முடிவுகளில் இருந்து சில பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம் என ஷா ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



