இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : ரஹானே மகிழ்ச்சி
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 83 ரன்களையும், கேமரூன் கிரின் 34 ரன்களையும் குவித்தனர். பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது :
20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று இறுதியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது :
உண்மையிலேயே இந்த போட்டியில் பெற்ற வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் 16 ஓவருக்கு மேல் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. டாப் ஆர்டரில் நாங்கள் தொடர்ந்து தடுமாறியிருந்தாலும் கடைசி நேரத்தில் ரிங்கு சிங் ஆடிய ஆட்டம் இந்த போட்டியின் மொமன்டத்தையே மாற்றியது. இந்த மைதானத்தில் நான் ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.
இதையும் படிங்க : இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி
இந்த மைதானத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை அடித்தால் போதும் என்று நினைத்தோம். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி அவரைகளை இந்த இலக்கை எட்ட விடாமல் தடுத்து நிறுத்தியது அற்புதமாக இருந்தது. உண்மையிலேயே இந்த வெற்றிக்கு ரிங்கு சிங் தான் மிகப்பெரிய காரணம் என அஜின்க்யா ரஹானே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



