டாஸ் தான் இங்க எல்லாமே.. சொந்த மைதானத்திலேயே நாங்க தோக்க இதுவே காரணம் – ரிஷப் பண்ட் வருத்தம்

Rishabh Pant (1)
- Advertisement -

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது நேற்று தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அதன்படி நடைபெற்ற இந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

லக்னோ மைதானத்தில் இதுதான் எப்போவும் நடக்கும் : ரிஷப் பண்ட்

அவர்களது அற்புதமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ அணியானது : நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவிக்க டெல்லி அணிக்கு 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி 17.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியையும் பதிவு செய்தது.

- Advertisement -

இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தற்போது லக்னோ அணியானது 9 போட்டிகளில் 5 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் என புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதே வேளையில் தங்களது எட்டாவது போட்டியில் விளையாடிய டெல்லி அணி ஆறாவது வெற்றியை பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் 20 ரன்கள் வரை நாங்கள் குறைவாக குவித்து விட்டோம். லக்னோ மைதானத்தில் எப்பொழுதுமே டாசிற்கு பெரிய பங்கு உண்டு. ஏனெனில் எந்த அணி டாசில் வெற்றி பெற்றாலும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்யும்.

- Advertisement -

அந்த அளவிற்கு முதலில் பந்துவீசும் போது இந்த மைதானம் அவர்களுக்கு உதவும். நாங்களும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்றிருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். மேலும் இரண்டாம் பாதியில் பேட்ஸ்மன்களுக்கு சற்று சாதகம் ஏற்படும் என்பதனால் எங்களது பந்துவீச்சாளர்கள் மீது குறை கூற எதுவும் இல்லை.

இதையும் படிங்க : லக்னோ அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு காரணம் இதுதான் – அக்சர் படேல் மகிழ்ச்சி

இந்த போட்டியை பொறுத்தவரை டாஸ் தான் மிகப்பெரிய பங்கினை வகித்தது. ஆனாலும் நாங்கள் தோல்விக்கு எவ்வித காரணங்களை கூறி தப்பிக்க முடியாது. ஒட்டுமொத்தமாகவே இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சிறப்பாக இல்லை என்பதனாலும் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததாக ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement