லக்னோ அணிக்கெதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு காரணம் இதுதான் – அக்சர் படேல் மகிழ்ச்சி

Axar Patel
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

லக்னோ அணியை நாங்கள் வீழ்த்த இதுவே காரணம் : அக்சர் படேல்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. லக்னோ சார்பாக அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 45 ரன்களையும் குவித்தனர். டெல்லி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 57 ரன்களையும், அபிஷேக் போரல் 51 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்ஸர் பட்டேல் கூறுகையில் : இந்த போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை. அதாவது போட்டியின் ஆரம்பத்திலேயே எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஆனாலும் நாங்கள் கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் ஆட்டத்திற்குள் வந்தோம். முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் அனைத்துமே எங்களது கட்டுப்பாட்டில் வந்தது.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள் 160 ரன்களுக்குள் எதிரணியை சுருட்டியது மிகச் சிறப்பான ஒன்று. பந்துவீச்சில் சிறப்பான செயல்பாடு இந்த போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கடந்த சில போட்டிகளாகவே எனக்கு சிறிய அளவிலான காயம் இருந்ததாலே நிறைய ஓவர்களை வீச முடியாமல் போனது. ஆனால் தற்போது அனைத்தும் சரியாகி விட்டதால் நான் மீண்டும் பந்துவீச வந்துள்ளேன். இந்த போட்டியில் சரியான பந்துவீச்சாளர்களை, சரியான இடத்தில் சுழற்சி முறையில் வீச வைத்தது எதிரணியை கட்டுக்குள் கொண்டு வந்ததாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : 57 ரன்ஸ்.. அவமானப்படுத்திய லக்னோ ஓனரை பாராட்ட வைத்த ராகுல்.. வார்னர், கோலியை முந்தி வரலாற்று சாதனை

பேட்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். நான் எந்த இடத்தில் களமிறங்குகிறேன் என்பது எனக்கு முக்கியமில்லை ஆனால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே பேட்டிங் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறேன் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement