ஐபிஎல் 2025 தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி லக்னோவில் 40வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி லக்னோவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 159-6 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரான் 9, அப்துல் சமத் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதிகபட்சமாக ஐடன் மார்க்கம் 52, மிட்சேல் மார்ஷ் 45, ஆயுஷ் படோனி 36 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து விளையாடிய டெல்லிக்கு கருண் நாயர் 9 ரன்னில் மார்க்ரம் சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
டெல்லி வெற்றி:
அவருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் போரேல் இரண்டாவது வீக்கத்துக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 51 ரன்கள் எடுத்த போது மார்க்கம் சுழலில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ராகுல் அரை சதத்தை அடித்து 57* (42) ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் அக்சர் பட்டேல் 34* (20) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.
அதனால் 17.5 ஓவரிலேயே 161/2 ரன்களை எடுத்தேன் டெல்லி 8 போட்டிகளில் 6வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியின் முடிவில் 57 ரன்கள் அடித்த கேஎல் ராகுலை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பாராட்டினார். கடந்த வருடம் ஒரு போட்டியில் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் இதே மைதானத்தில் அவர் பொது வெளியில் ராகுலை திட்டும் வகையில் பேசினார்.
ராகுல் சாதனை:
அதனால் லக்னோ அணியிலிருந்து வெளியேறிய அவர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடி வரும் ராகுல் தற்போது லக்னோவை அதன் சொந்த மைதானத்தில் சஞ்சீவ் முன்னிலையில் தோற்கடித்து தம்முடைய திறமையை நிரூபித்து அவரையே பாராட்ட வைத்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் வாழ்க்கை ஒரு வட்டம் என்று சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.
இதையும் படிங்க: சிஎஸ்கே அசத்தலன்னு ஒத்துகிறேன்.. ஆனா அந்த காரணத்தால் 2010 மாதிரி கம்பேக் கொடுப்போம்.. விஸ்வநாதன் நம்பிக்கை
இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் ராகுல் 135 இன்னிங்சில் 5000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் வேகமாக ஐந்தாயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னர் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. கேஎல் ராகுல்: 130
2. டேவிட் வார்னர்: 135
3. விராட் கோலி: 157
4. ஏபி டீ வில்லியர்ஸ்: 161
5. ஷிகர் தவான்: 168



