சிஎஸ்கே அசத்தலன்னு ஒத்துகிறேன்.. ஆனா அந்த காரணத்தால் 2010 மாதிரி கம்பேக் கொடுப்போம்.. விஸ்வநாதன் நம்பிக்கை

Kasi Viswanathan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திணறி வருகிறது. இம்முறை முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்ற சென்னை அதன் பின் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர்ச்சியான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை தொடர்ந்து அசத்தும் என்று நம்பப்பட்டது.

ஆனால் மும்பைக்கு எதிராக மீண்டும் சொதப்பிய சென்னை 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தங்களது கடைசி 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வருடம் இதுவரை வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்து சிஎஸ்கே இங்கிருந்து பிளே ஆஃப் செல்லாது என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.

- Advertisement -

கம்பேக் கொடுப்போம்:

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடம் இதுவரை நன்றாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாக தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திர கேப்டன் தோனி தலைமையில் சிவம் துபே போன்ற நல்ல வீரர்கள் அணியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே 2010 போல அடுத்து வரும் போட்டிகளில் வென்று சென்னை கம்பேக் கொடுக்கும் என்று விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளை பார்த்து நீங்கள் அனைவரும் ஏமாற்றத்தை சந்தித்திருப்பீர்கள். கண்டிப்பாக அது இருக்க வேண்டும். நாங்கள் தற்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அடுத்த வரும் போட்டிகளில் எங்களால் நன்றாக விளையாட முடியும் என்று நம்புகிறோம்”

- Advertisement -

2010 மாதிரி வருவோம்:

“சிவம் துபே போன்ற நல்ல வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். அவர் சமீபத்திய வருடங்களாகவே நன்றாக செயல்பட்டு வருகிறார். கூடவே தல தோனி போன்ற ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருந்தால் நாங்கள் கம்பேக் கொடுப்பதற்கு காலத்தின் கேள்வி மட்டுமே உள்ளது. நாங்கள் 2010 தொடரை நினைத்து பார்க்கிறோம். அந்த வருடம் நாங்கள் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தும் கோப்பையை வென்றோம்”

இதையும் படிங்க: தோனி, திக்வேஷ் மட்டும் ஏமாளியா? விராட் கோலிக்கு ஏன் அபராதம் போடல.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

“அந்த வருடமே நாங்கள் எங்களுடைய முதல் கோப்பையையும் வென்றோம். அந்த நம்பிக்கையுடன் எங்களுடைய வீரர்கள் உறுதியாக உள்ளனர். எங்களுடைய அணியும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் உறுதியுடன் இருக்கிறது. அதனால் வரும் போட்டிகளில் எங்களுடைய அணி சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement