15 மாதங்கள் கழித்து கிரிக்கெட் களத்திற்கு திரும்பியது குறித்து பேசிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Rishabh-Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஓராண்டாக சிகிச்சை மேற்கொண்டு வந்த ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் கிரிக்கெட் பயிற்சியினை மேற்கொண்டு ஐபிஎல் தொடருக்காக தயாராகி வந்தார்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் துவங்கியுள்ள 17-வது ஐபிஎல் தொடரில் இடம் பிடித்துள்ள அவர் 15-ந்து மாதங்கள் கழித்து மீண்டும் களம் இறங்கியதால் அவர் எப்படி பேட்டிங் செய்யப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் 13 பந்துகளை சந்தித்து 18 ரன்களை குவித்து இருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். பேட்டிங்கில் சற்று மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்திய அவர் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் நேற்றைய போட்டியில் தொடர்ச்சியாக அவர் விக்கெட் கீப்பிங் செய்தது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. அதோடு முன்பை விட உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ள ரிஷப் பண்ட் விரைவில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் 15 மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளது குறித்து பேசிய ரிஷப் பண்ட் கூறுகையில் : தனிப்பட்ட முறையில் நான் பேட்டிங் செய்ய களம் இறங்கிய போது மிகவும் பதட்டம் அடைந்தேன். நீங்கள் களத்தில் இருக்கும் போது இதையெல்லாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நான் பதட்டம் அடைவது முதல் தடவை அல்ல.

இதையும் படிங்க : 7 சரவெடி சிக்ஸர்கள் 2 விக்கெட்ஸ்.. ஜாம்பவான்கள் ஜேக் காலிஸ், கெயில் சாதனைகளை உடைத்த ரசல்.. 2 புதிய சாதனை

ஆனால் மீண்டும் பெரிய இடைவெளிக்கு பின்னர் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பேட்டிங்கில் சறுக்கிய நிலையில் இஷாந்த் சர்மா காயமடைந்தது இந்த போட்டியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. ஒரு பந்துவீச்சாளர் குறைவாக இருந்ததால் அது போட்டியில் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியது என பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement