IND vs ENG : இந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் – ஆட்டநாயகன் ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

Rishabh-Pant-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய வேளையில் தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி உள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

Rishabh Pant 1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. ஆனாலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 261 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்துவீச்சில் 4 விக்கெட்களை கைப்பற்றிய பாண்டியா பேட்டிங்கிலும் 71 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கை கொடுத்தார். அதே வேளையில் இந்த போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட் 113 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 125 ரன்கள் அடித்து அசத்தினார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Rishabh Pant

இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற ரிஷப் பண்ட் பேசியதாவது : இந்த போட்டியில் என்னுடைய பங்களிப்போடு இந்திய அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். இந்த போட்டியின் முதல் பந்திலிருந்தே நான் மிகவும் போகஸ் உடன் விளையாடினேன். அணி ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும்போது பேட்டிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியிலும் நான் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். எப்போதுமே இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. அதே வேளையில் இங்கு இருக்கும் சூழ்நிலையும், ரசிகர்களின் ஆதரவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய போட்டிகளில் விளையாடுவதன் மூலம் நிறைய அனுபவம் கிடைக்கும்.

இதையும் படிங்க : IND vs ENG : ஒருநாள் தொடரை ஜெயித்த பிறகு இந்திய அணியின் ஸ்ட்ரென்த் மற்றும் வீக்னஸ் குறித்து பேசிய – ரோஹித் சர்மா

அந்த வகையில் நான் தற்போது நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிக அருமையாக இருந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக பந்து வீசினார்கள் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement