குஜராத் அணிக்கெதிரான போட்டியில் மிட்சல் மார்ஷ் விளையாடாதது ஏன்? – கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம்

Mitchell Marsh
- Advertisement -

ரசிகர்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியானது லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

குஜராத் அணிக்கெதிரான போட்டியில் மிட்சல் மார்ஷ் இடம்பெறாதது ஏன்?

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 62 ரன்களையும், சாய் சுதர்சன் 56 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கலஸ் பூரான் 61 ரன்களையும், எய்டன் மார்க்ரம் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரரான மிட்சல் மார்ஷ் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியது. ஏனெனில் எந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்சல் மார்ஷ் இப்படி தொடரின் நடுவே திடீரென குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

அதற்கு டாஸின் போது பதிலளித்த லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இன்றைய போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக மிட்சல் மார்ஷ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஹிம்மத் சிங் விளையாடுகிறார் என்றும் மிட்சல் மார்ஷ் தனது குழந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த போட்டியில் விளையாடவில்லை என்றும் நிச்சயம் மீண்டும் அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய ரசிகர்கள் என்னை பற்றி அப்படி பேசவே மாட்டாங்க.. பாக் பத்திரிகையாளர் கேள்விக்கு – டேவிட் வார்னர் நோஸ்கட்

இந்த போட்டியில் மிட்சல் மார்ஷுக்கு பதிலாக லக்னோ அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 18 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement