ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பி.எஸ்.எல் டி20 கிரிக்கெட் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் இந்த 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. அதன் காரணமாகவே அவரது பார்வை பாகிஸ்தான் பிரீமியர் லீக் பக்கம் திரும்பியுள்ளது.
இந்திய ரசிகர்கள் என்னை பத்தி தப்பா பேசமாட்டாங்க : டேவிட் வார்னர்
ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் போட்டிகளின் போது பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்டாலும் முன்பு போன்ற அதிரடி அவரது பேட்டிங்கில் இல்லை என்பதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரோடு டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை தங்களது அணியில் இருந்து கழட்டிவிட்டது.
அதனை தொடர்ந்து 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் தேர்வு செய்யாததால் அவர் விற்கப்படாமல் போனார். இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்றாலும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடருக்கான கராச்சி அணியில் தேர்வு செய்யப்பட்ட அவர் தற்போது அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கராச்சி கிங்ஸ் கேப்டன் டேவிட் வார்னரிடம் ஐபிஎல் தொடரில் உங்களை வாங்கவில்லை என்பதற்காக இந்திய ரசிகர்கள் மிகவும் கேலி செய்வதாகவும், உங்கள் மீது வெறுப்பை பரப்புவதாகவும் தெரிவித்து ஒரு கேள்வியை எழுப்பினார். ஆனால் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் எழுப்பிய அந்த கேள்விக்கு மிகச் சிறப்பான பதிலை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் கூறுகையில் :
நீங்கள் சொல்வதை நான் இப்போதுதான் முதல்முறையாக கேள்விப்படுகிறேன். எந்த இந்திய ரசிகர்களும் என்னை பற்றி அப்படி பேசி நான் பார்த்ததே கிடையாது. இந்திய ரசிகர்கள் அனைவரும் எனது மீதும், என் ஆட்டத்தின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். முன்பு சர்வதேச கிரிக்கெட் அட்டவணையால் பி.எஸ்.எல் தொடரில் என்னால் விளையாட முடியாமல் போனது.
இதையும் படிங்க : 7 அரைசதம் மற்றும் 1 சதம் மாஸ் காட்டும் இளம் தமிழக வீரர்.. பூரானை தாண்டி அசத்தல் – விவரம் இதோ
ஆனால் இப்பொழுது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் பி.எஸ்.எல் தொடரில் விளையாடுகிறேன். எனது தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும் என்று தான் நம்புவதாகவும் டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.



