- Advertisement -

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரெடி.. ஒதுக்கப்பட்ட பாண்டியா – துண்டு போட்ட இளம்வீரர்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவிற்கு துணை கேப்டன் பதவியையும் வழங்கி இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி காட்டி இருந்தது.

ஆனாலும் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ரோகித் சர்மா பாண்டியாவுடன் அவ்வளவு ஒற்றுமையாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்கால கேப்டன் பாண்டியா தான் என்று பலரும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் தற்போது நடைபெற்று வரும் விடயம் அவருக்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பாண்டியா பார்க்கப்பட்டாலும் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடுகையில் ரோகித் சர்மாவிற்கு உறுதுணையாக ரிஷப் பண்டே ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

ரிவ்யூ கேட்பது, பீல்டிங் நிறுத்துவது, பந்துவீச்சாளர்கள் என்ன திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை ரோகித் சர்மாவிடம் அவர் வழங்கிக் கொண்டே இருந்தார். அதே வேளையில் பாண்டியா ரோகித் சர்மாவின் அருகில் கூட செல்லவில்லை.

- Advertisement -

இந்த காட்சிகளை பார்த்த போது நிச்சயம் ரிஷப் பண்ட் தான் அடுத்த கேப்டனாக மாற முடியும் என்று தெரிகிறது. அதோடு கடந்த 15 ஆண்டுகளாகவே ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற வீரர்கள் மட்டுமே இந்திய அணி கேப்டனாக இருந்து வரும் வேளையில் பாண்டியாவை விட ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளதால் நிச்சயம் அவரே அடுத்த கேப்டனாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 77க்கு ஆல் அவுட்.. டி20யில் டெஸ்ட் விளையாடிய இலங்கை 2 மோசமான சாதனை.. ஆன்றிச் நோர்ட்ஜே வரலாற்று சாதனை

அதோடு பாண்டியாவின் ஆட்டிட்யூட் பிரச்சினை காரணமாக ரசிகர்கள் வசைப்பாடி வரும் வேளையில் இந்த சமயத்தில் ரிஷப் பண்ட் அதனை தனக்கு சாதகமாக மாற்றி அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதே உண்மை..

- Advertisement -