முன்னாடி நான் தப்பு பண்ணேன். ஆனா இப்போ.. தொடர் நாயகன் விருதுக்கு பிறகு பேசிய – ரிஷப் பண்ட்

Pant-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வாஷ் அவுட் செய்து கைப்பற்றியது. பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

IND

- Advertisement -

அதன் காரணமாக தற்போது இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 96 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 39 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் என அசத்தியிருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு இந்த தொடரின் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை முதல் முறையாக பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருந்தார். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் இந்த தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவரை பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு புறம் அவரை அனைவரும் புகழ்ந்து வர இந்த தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற பின்னர் தான் செய்த சில தவறுகள் பற்றியும் தனது முன்னேற்றம் குறித்தும் அவர் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

Pant

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே என்னுடைய பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டையுமே முன்னேற்று நினைக்கிறேன். அதன்படி தற்போது என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். ஆனாலும் கடந்த காலங்களில் நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். பேட்டிங்கிலும் சரி விக்கெட் கீப்பிங் சரி நிறைய தவறுகள் நிகழ்ந்து இருக்கின்றன. ஆனால் தற்போது அதிலிருந்து படிப்படியாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். நான் இந்த தொடரில் சிறப்பாக விளையாட என்னுடைய மனநிலை காரணம் அல்ல.

- Advertisement -

தொடர்ச்சியாக எனது ஆட்டத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் என்னுள் இருக்கிறது. குறிப்பாக பெங்களூரு நகரில் நடந்த இந்த போட்டியில் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே நான் வேகமாக ரன்களை குவிக்க நினைத்தேன். அப்படி விளையாடினால் மட்டுமே இந்த மைதானத்தில் சிறப்பான ஆட்டம் வெளிப்படும். எனவே இந்த ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.

இதையும் படிங்க : ஜாம்பவான் தோனி கூட செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்து சரித்திரம் படைத்த – ரிஷப் பண்ட்

அதோடு ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நிர்வாகம் விரும்பியது. அதன் காரணமாகவே இந்த தொடரில் ஐந்தாவது இடத்தில் விளையாடினேன். இருப்பினும் எந்த இடத்தில் விளையாடினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. அதை தவிர்த்து வேறு ஏதும் நான் அதிகமாக யோசிக்கவில்லை. தற்போதெல்லாம் நான் என்னுடைய போகஸை என்னுடைய திறமைகளை வெளிக் கொணர்வதில் தான் வைத்திருக்கிறேன். அதனாலேயே என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement