ஜாம்பவான் தோனி கூட செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்து சரித்திரம் படைத்த – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்தியா – இலங்கை அணிகள் மோதி வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் இந்தியா வென்று அசத்தியது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் 12-ஆம் தேதி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற 2வது போட்டியிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இந்தியா 238 ரன்கள் வித்யாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்று சொந்த மண்ணில் மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியைப் ருசித்தது.

IND

- Advertisement -

ஏமாற்றத்துடன் திரும்பிய இலங்கை:
முன்னதாக பெங்களூருவில் நடந்த இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதிரடியாக பேட்டிங் செய்த இளம் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார். அதன்பின் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு அதன் கேப்டன் கருணரத்னே உள்ளிட்ட அனைத்து வீரர்களும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மெத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார்.

அதன் காரணமாக 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பேட்டிங்கில் மீண்டும் அசத்திய ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்கள் குவித்தார். இறுதியில் 447 என்ற மெகா இலக்கை துரத்திய இலங்கை 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் அதன் கேப்டன் திமுத் கருணரத்னே சதமடித்து 107 ரன்கள் விளாசி தோல்வியை தவிர்க்க தனி ஒருவனாக போராடினார். ஆனால் இதர இலங்கை வீரர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்காததால் அந்த அணி பரிதாப தோல்வி அடைந்தது.

Sl

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வந்த இலங்கை முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் 3 – 0 என படுதோல்வியடைந்தது. அந்த நிலையில் நடந்த டெஸ்ட் தொடரிலும் ஒரு வெற்றியை கூட பெற முடியாத அந்த அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

- Advertisement -

மிரட்டிய ரிஷப் பண்ட்:
முன்னதாக பெங்களூருவில் நடந்த இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் வெறும் 26 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 39 ரன்கள் விளாசினார். அதன்பின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய அவர் அதைவிட ஒருபடி மேலே சென்று சந்தித்த முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். பொதுவாகவே அதிரடியாக பேட்டிங் செய்ய கூடிய அவர் 2-வது இன்னிங்ஸ்சில் மிரட்டலான பேட்டியை வெளிப்படுத்தி வெறும் 31 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் அரைசதம் கடந்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

pant 1

குறிப்பாக வெறும் 28 பந்துகளில் அரை சதத்தை தொட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். கடந்த 1982-ஆம் ஆண்டு கராச்சி நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 40 பந்துகளில் அரைசதம் அடித்த ஜாம்பவான் கபில்தேவ் இதுநாள் வரை அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். தற்போது அதை 30 ஆண்டுகளுக்கு பின் ரிஷப் பண்ட் உடைத்துள்ளார்.

- Advertisement -

தோனியால் கூட முடியாத சரித்திர சாதனை:
அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையையும் அவர் தூள் தூளாக நொறுக்கினார். இதற்கு முன் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திரம் எம்எஸ் தோனி 34 பந்துகளில் அதிவேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். தற்போது அதையும் விட்டு வைக்காத ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Rishabh Pant MS Dhoni

மேலும் இந்த தொடரில் மொத்தமாக 3 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய அவர் 185 ரன்கள் விளாசியதால் தொடர்நாயகன் விருதையும் வென்று அசத்தினார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையையும் அவர் படைத்தார்.

கடந்த 90 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கிரண் மோர், சயீத் கிர்மானி, எம்எஸ் தோனி என எத்தனையோ விக்கெட் கீப்பர்கள் விளையாடிய போதிலும் அவர்களில் ஒருவர்கூட இதுவரை தொடர் நாயகன் விருதை வென்றது கிடையாது.

Rishabh Pant Adam Gilchrist

குறிப்பாக இந்தியா கண்ட மகத்தான விக்கெட் கீப்பராக கருதப்படும் எம்எஸ் தோனி கூட 90 போட்டிகளில் விளையாடிய போதிலும் இது போன்றதொரு தொடர் நாயகன் விருதை வென்றதே இல்லை. ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட் வெறும் 4 வருடத்திற்குள் இந்த சரித்திர மிகுந்த சாதனையை படைத்துள்ளது உண்மையாகவே பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும் உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருது வென்ற விக்கெட் கீப்பர் என்ற ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையையும் ரிஷப் பண்ட் தொட்டுள்ளார். ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இதுவரை 3 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement