43/3 என சரிந்தும் கடைசியில் குஜராத் தோற்கடிக்க காரணம் இது தான்.. ஆட்டநாயகன் ரிஷப் பண்ட் பேட்டி

Rishabh Pant 4
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற 40வது லீக் போட்டியில் குஜராத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 224/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிசப் பண்ட் 88*, அக்சர் படேல் 66 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 225 ரன்களை சேசிங் செய்த குஜராத்துக்கு ரித்திமான் சகா 39, தமிழக வீரர் சாய் சுதர்சன் 66, டேவிட் மில்லர் 55 ரன்களை எடுத்து அதிரடியாக போராடினர். இருப்பினும் எதிர்புறம் கேப்டன் சுப்மன் கில் 6, ஓமர்சாய் 1, ஷாருக்கான் 8, ராகுல் திவாடியா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் பண்ட்:
அதனால் கடைசியில் ரசித் கான் 21*, சாய் கிஷோர் 13 ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் குஜராத்தை 220/8 ரன்கள் கட்டுப்படுத்திய டெல்லி த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரசிக் சலாம் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு 84 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயக்கனாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்பாக மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2, 6, 4, 6, 6, 6 என 30 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பேட்டிங்கில் 43/3 என ஆரம்பத்தில் சரிவை சந்தித்த போது ரசித் கான் போன்ற குஜராத்தின் முதன்மை ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் திட்டத்தை கையில் எடுத்ததாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 என்பது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. 14 – 15 ஓவர்கள் முடிந்ததும் பந்து நன்றாக வந்தது. எனவே ரசிக் மீது நம்பிக்கையை வைக்க விரும்பினோம். ஒரு போட்டியில் நன்றாக பந்து வீசும் ஒருவரை நாங்கள் எப்போதும் நம்புவோம். அதனாலேயே அவரை 19வது ஓவரில் பயன்படுத்தினேன். இது போன்ற விஷயங்கள் கேப்டனாக உங்களுடைய உள்ளுணர்வில் கிடைக்கும். அது இன்று வேலை செய்ததில் மகிழ்ச்சி”

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் பேச்சை கேட்டு செயல்பட்ட வீரரை அணியில் இருந்து நீக்கிய பாண்டியா – இதெல்லாம் ரொம்ப மோசம்

“கண்டிப்பாக 43/3 என சரிந்த போது தொடர்ந்து விளையாடி அவர்களுடைய முதன்மை ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாகும். அதைப் பின்பற்றி ஸ்ட்ரைக்கை மாற்றினால் எங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சித்தோம். ஒவ்வொரு நாளும் களத்தில் நான் நன்றாக உணர்கிறேன். களத்தில் ஒவ்வொரு மணி நேரமும் இருப்பதை விரும்பும் நான் 100% பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல் சிக்சர் அடித்ததும் எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது” என்று கூறினார்.

Advertisement