டிகே’வை பார்த்து ரிஷப் பண்ட் கத்துக்கணும் – அன்று டிகே’வை விமர்சித்த அதே முன்னாள் முன்னாள் வீரர் இன்று அறிவுரை

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

விரைவில் துவங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டது நிறைய அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த 2017இல் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியால் முடியாத சாதனைகளை அசால்டாக படைத்த அவர் “காபா” போன்ற சில சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அதன் காரணமாக அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக அவரை உருவாக்க நினைக்கும் பிசிசிஐ அதற்காக தொடர்ந்து சொதப்பினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.

Rishabh Pant

- Advertisement -

அதிலும் 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் இதுவரை ஒருமுறை கூட மனதில் நிற்கும் அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாத அவருக்கு பதிலாக காலம் காலமாக வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. அதுபோக 37 வயதிலும் தம்மால் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற லட்சியத்துடன் ஐபிஎல் தொடரில் போராடி 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்கை நம்பாத கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை நம்பி ஆசிய கோப்பையில் வாய்ப்பு கொடுத்தது.

டிகே’வை பின்பற்றுங்க:
அதில் வழக்கம் போல சொதப்பிய அவரை மீண்டும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க தொடரில் தேர்வுக்குழு சேர்த்தது. மறுபுறம் அவரை எப்படியாவது வெற்றிகரமாக செயல்பட வைத்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ள ரோகித் சர்மா உள்ளிட்ட அணி நிர்வாகம் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய அவருக்கு ஓப்பனிங், 4வது இடம் என பல்வேறு இடங்களில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்து வருகிறது. ஆனாலும் அதை பயன்படுத்தத் தவறும் அவர் டி20 கிரிக்கெட்டில் முன்னேறுவதற்கு 37 வயதிலும் அசத்தும் தினேஷ் கார்த்திக்கை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா அறிவுறுத்தியுள்ளார்.

DK and Pant

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரர் ஒரு வேலையை தான் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையில் இருந்து இந்தியா நகர்ந்து விட்டதாலும், அவர் (பண்ட்) எந்த வேலைக்கும் பொருந்தாத காரணத்தாலும் தன்னுடைய இடத்தை இழந்து நிற்கிறார். மறுபுறம் தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பான வேலையை செய்து வருகிறார். தன்னுடைய வேலையில் அசத்தும் அவர் ஆரம்ப காலங்களில் நம்பர் 4 இடத்தில் இப்படி பேட்டிங் செய்திருந்தால் இப்போது அடித்த 46 ரன்களை (இந்தூர் போட்டியில்) எப்படி தூக்கி எறிய முடியும்?”

- Advertisement -

“எனவே தற்சமயத்தில் ரிஷப் பண்ட் கற்றுக் கொள்வதற்கு சக வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளார். அவர் தினேஷ் கார்த்திக்கிடம் “நான் என்ன செய்ய வேண்டும். நீங்களும் இதே போல் தடுமாறினீர்கள், அதிலிருந்து வெளிவந்து தற்போது சிறப்பாக செயல்படுவதற்கு என்ன செய்தீர்கள் என்ற வழியை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்க வேண்டும். நான் ரிஷப் பண்ட்டின் மிகப்பெரிய ரசிகன் என்றாலும் இதே போல் விளையாடினால் எவ்வளவு காலம் நான் அவருக்கு ஆதரவு கொடுக்க முடியும்? டி20 கிரிக்கெட்டில் அவரிடம் தடுமாற்றமான திறமையே உள்ளது. எனவே இந்த பிரச்சனையை அவர் விரைவில் சரி செய்ய வேண்டும்”

Ajay

“ரிஷப் பண்ட் வெகுதூரம் சொல்ல வேண்டியதில்லை அவர் தன்னுடைய அணி வீரரை பார்த்தால் போதும். அதாவது தினேஷ் கார்த்திக் மீது நம்பிக்கை ஏற்பட அணி நிர்வாகத்துக்கு 15 வருடங்கள் தேவைப்பட்டது. அவரும் ரிஷப் பண்ட் போன்ற திறமை கொண்டவர். அதனாலேயே அவரைத் தொடர்ந்து அணி நிர்வாகம் அவ்வப்போது மீண்டும் மீண்டும் கொண்டு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படாமல் போனால் அணி உங்களை மொத்தமாக கழற்றிவிட்டு விடும்” என்று கூறினார்.

முன்னதாக பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது, என்னுடைய உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் தகுதியானவர் என்று சொன்ன அதே அஜய் ஜடேஜா தற்போது அவரை பின்பற்றுமாறு ரிஷப் பண்ட்க்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு தினேஷ் கார்த்திக் உயர்ந்துள்ளது பாராட்டத்தக்கதாகும்.

Advertisement