என்னை வாங்குவாங்களா? மாட்டாங்களா? ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பிய ரிஷப் பண்ட் – என்ன நடந்தது?

Pant
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கிய அவர் ஒன்றரை ஆண்டுகள் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காத வேளையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார்.

ஏலத்திற்கு வந்தால் என்னை வாங்குவார்களா? :

அதனை தொடர்ந்து 2024 டி20 உலககோப்பை அணியில் இடம் பிடித்த அவர் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற இருக்கும் வேளையில் அவர் சிஎஸ்கே அணிக்காக மாறப்போவதாக பலரும் பேசி வந்தனர்.

- Advertisement -

ஆனால் அந்த கருத்தினை மறுத்த அவர் தொடர்ந்து டெல்லி அணிக்காகவே விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். இதன் காரணமாக சென்னை அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தனது பதிலின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது திடீரென அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ள ரிஷப் பண்ட் அதில் குறிப்பிட்டதாவது : ஒருவேளை நான் மெகா ஏலத்திற்கு வந்தால் என்னை எந்த அணியாவது வாங்குவார்களா? வாங்க மாட்டார்களா? அல்லது எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவேன்? என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.

- Advertisement -

அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே டெல்லி அணி அவரை ரீடெயின் செய்யும் என்று பேசிவந்த வேளையில் திடீரென அவர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டதால் அவர் ஏலத்திற்கு வருவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : ஹாங்காங் சிக்ஸ் 2024 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி.. கேதர் யாதவ் பேக்.. கேப்டன் யார் தெரியுமா?

ஒருவேளை அப்படி அவர் மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை பெரிய தொகை கொடுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி அதிரடியான ஆட்டக்காரர் என்பதனாலும், மேட்ச் வின்னர் என்பதனாலும் அவர் ஒருவேளை ஏலத்திற்கு வந்தால் நிச்சயம் பலகோடிக்கு விலை போவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement