ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த 36வது போட்டியில் ராஜஸ்தானை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சாய்த்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66, ஆயுஷ் படோனி 50, அப்துல் சமத் 30* ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 178-5 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களுடைய 6வது தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் சூரியவன்சி 34, ஜெயஸ்வால் 74, கேப்டன் ரியான் பராக் 39 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 17 ஓவரில் 157-3 என்ற நல்ல நிலைமையில் இருந்த ராஜஸ்தான் கையில் வெற்றியை வைத்திருந்தது.
லக்னோ த்ரில் வெற்றி:
ஆனால் அப்போது அபாரமாக பௌலிங் செய்த ஆவேஷ் கான் 18, 20வது ஓவரில் வெறும் 5, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து லக்னோவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இது போன்ற வெற்றி தான் வெற்றிக்கு போராடக்கூடிய கேரக்டரை தங்களுடைய அணியில் உருவாக்கியுள்ளதாக லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
இந்த வெற்றியால் நேர்மறையான வழியில் பயணிப்பதாக தெரிவிக்கும் அவர் ராஜஸ்தானை கடைசி ஓவரில் சாய்த்த திட்டத்தை பகிர்ந்தது பின்வருமாறு. “நிம்மதி மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டுமே கிடைத்துள்ளது. இது போன்ற போட்டிகள் தான் கேரக்டரை கட்டமைக்கும். இது அற்புதமான வெற்றி. ஒரு அணியாக இந்த வெற்றி எங்களை வித்தியாசமான லெவலுக்கு எடுத்துச் செல்லும். இது போன்ற வெற்றிகள் தான் வெற்றிக்கு போராடக்கூடிய கேரக்டரை வீரர்கள் மற்றும் அணியில் உருவாக்கும்”
பண்ட் நிம்மதி:
“நாங்கள் எடுத்துக் கொள்ள எப்போதும் எங்களுக்கு நேர்மறையான விஷயங்கள் இருக்கின்றன. வரும் போட்டிகளில் இன்னும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று உணர்கிறேன். பதற்றமான நேரத்தில் தங்களுடைய உணர்வுகளை சரியாகப் பிடித்து அசத்திய எங்களுடைய பவுலர்களுக்கு பாராட்டுக்கள். ராஜஸ்தான் பெரும்பாலான நேரங்களில் முன்னிலையில் இருந்தது. நல்ல பேட்டிங் வரிசையை கொண்ட அவர்களுக்கு எதிராக எங்களது பவுலர்கள் உணர்வை கட்டுப்படுத்தி விளையாடினார்கள்”
இதையும் படிங்க: ஆவேஷ் கானை விட.. தப்பு என் மேல.. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பறிபோக இதான் காரணம்.. கேப்டன் பராக் பேட்டி
“குறிப்பாக ஆவேஷ் கான் 3 ஓவர்களை அபாரமாக பௌலிங் செய்தார். கடைசி ஓவரில் எங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொண்டு தெளிவான மனதுடன் ஒரு நேரத்தில் ஒரு பந்தை மட்டும் எடுத்து பவுலர்கள் மற்றும் ஃபீல்டர்களை நம்பி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே ஐடியாவாகும். நாங்கள் நேர்மறையான வழியில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வெற்றியை தற்போது மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இங்கிருந்து முன்னேறுவதற்கான விஷயங்கள் பற்றி நாங்கள் உட்கார்ந்து பேச வேண்டும்”என்று கூறினார்.



