ஆவேஷ் கானை விட.. தப்பு என் மேல.. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பறிபோக இதான் காரணம்.. கேப்டன் பராக் பேட்டி

Riyan Parag 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36வது போட்டியில் ராஜஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 181 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66, ஆயுஷ் படோனி 50, அப்துல் சமத் 30* ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 74, சூர்யவன்சி 34, கேப்டன் ரியான் பராக் 39 ரன்கள் எடுத்தனர். அதனால் 17 ஓவரில் 156/3 ரன்களை எடுத்த ராஜஸ்தான் வெற்றியை கைமேல் வைத்திருந்தது. ஆனால் அப்போது 18, 20வது ஓவரை வீசிய ஆவேஷ் கான் 5, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து லக்னோவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

பரிதாப ராஜஸ்தான்:

அதனால் லக்னோ தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பெற்ற நிலையில் ராஜஸ்தான் தங்களது 6வது தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் நன்றாக பேட்டிங் செய்த தாங்கள் 18 – 19 ஓவரிலேயே பினிஷிங் செய்திருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். அதை செய்யாததற்கான பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மற்றபடி ஆவேஷ் கான் பற்றி எதுவுமே தெரிவிக்காத அவர் தோல்விக்கான காரணத்தை விவரித்தது பின்வருமாறு. “தற்போதைய உணர்வுகளைப் பற்றி விவரிப்பது கடினமாக இருக்கிறது. எது தவறாக சென்றது என்று தெரியவில்லை. 18 – 19வது ஓவர்கள் வரை போட்டியில் நாங்கள் இருந்தோம். அனேகமாக 19வது ஓவரில் நாங்கள் போட்டியை ஃபினிஷிங் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

பராக் வருத்தம்:

“அதற்காக என்னை நானே குற்றம் சொல்லிக் கொள்கிறேன். எங்கள் வீரர்கள் அனைவரும் சேர்ந்து 40 ஓவர்களும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். பவுலிங் துறையில் உண்மையாகவே நாங்கள் நன்றாக செயல்பட்டோம். கடைசி ஓவர் துரதிஷ்டவசமாக மாறியது. அதை சிறப்பாக வீசியிருந்தால் எதிரணியை நாங்கள் 165 – 170 ரன்களில் நிறுத்தி இருப்போம்”

இதையும் படிங்க: ஸ்டார்க் மாதிரி வர விரும்பல.. கடைசி ஓவரில் ராஜஸ்தானை சாய்க்க இதை தான் செஞ்சேன்.. ஆட்டநாயகன் ஆவேஷ்

“சந்தீப் சர்மா பாய் நம்பிக்கைக்கு உரியவர். இது அவருக்கு ஒரு மோசமான போட்டியாக அமைந்தது. அப்துல் சமத் கடைசி ஓவரில் நன்றாக பேட்டிங் செய்தார். நாங்கள் இந்த இலக்கை சேசிங் செய்திருக்க வேண்டும். இன்றைய பிட்ச் நன்றாக இருந்ததால் அதைப் பற்றி புகார் செய்ய எதுவும் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி சரியான பாதையில் இருந்தோம். ஐபிஎல் தொடரில் இது போல சில பந்துகள் உங்களுக்கு தோல்வியை கொடுத்து விடும்” என்று கூறினார்.

Advertisement