ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி மும்பையில் 44வது போட்டி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. அதில் மும்பை அணி லக்னோவை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலே விளையாடிய மும்பை ரியான் ரிக்கல்டன் 58, சூரியகுமார் யாதவ் 54 வில் ஜேக்ஸ் 29 ரன்கள் எடுத்த உதவியுடன் 216 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அடுத்ததாக விளையாடிய லக்னோ ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஆயுஸ் பதோனி 35, மிட்சேல் மார்ஷ் 34 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4, ட்ரெண்ட் போல்ட் 3, வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இதையும் சேர்த்து 10 போட்டிகளில் லக்னோ 5வது தோல்வியை சந்தித்தது.
எதிரணியை பாராட்டுங்க:
இந்நிலையில் இந்தப் போட்டியில் லக்னோ தோல்வியை சந்தித்ததற்கானக் காரணங்களை கேட்காமல் சிறப்பாக விளையாடி வென்ற மும்பையை பாராட்டுங்கள் என்று கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அதே சமயம் தோல்விக்கான காரணங்கள் பற்றி அவர் விவரித்தது பின்வருமாறு. “ஒரு அணியாக முதலில் பவுலிங் செய்தது சரியான முடிவு என்று நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் எங்களது பேட்டிங்கிற்கு ஆதரவு கொடுக்கிறோம்”
“ஆம் எங்களுடைய பவுலர்களுக்கு நாங்கள் நல்ல சூழ்நிலையைக் கொடுக்க விரும்புகிறோம். ஆனால் இன்று எங்களுடைய நாள் கிடையாது. எதிரணி நல்ல கிரிக்கெட்டை விளையாடி வென்றது. எனவே உங்களை நீங்களே கேள்வி கேட்பதற்கு பதில் எதிரணி விளையாடி வென்ற விதத்திற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். எங்களுடைய அணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதைக் கண்டறிவதற்கான சரியான இடைவெளியும் கிடைக்க உள்ளது”
பண்ட் ஏமாற்றம்:
“என்னுடைய சுமாரான பேட்டிங் பற்றி அதிகமாக சிந்திக்காமல் அனைத்தையும் எளிமையாக வைத்திருக்கிறேன். ஐபிஎல் போன்ற தொடரில் வெற்றிகள் உங்கள் பக்கம் வராத போது ஒரு வீரராக உங்களுக்கு நீங்களே கேள்வியை கேட்பீர்கள். ஆனால் அதை நீங்கள் செய்ய விரும்பும் மாட்டீர்கள். அணி நன்றாக செயல்படும் போது அதை நீங்கள் சிந்திப்பீர்கள்”
இதையும் படிங்க: தரமான பும்ராவுக்கு எதிரா இதை செய்றது கஷ்டம்.. லக்னோவை சாய்த்தது பற்றி மும்பை ஆட்டநாயகன் ஜேக்ஸ் பேட்டி
“இது அணி விளையாட்டு. எனவே அதில் ஒவ்வொரு முறையும் நீங்கள் குறிப்பிட்ட நபரை குறித்துப் பேசுவது சரியான விஷயம் கிடையாது என்று நினைக்கிறேன். மயங் யாதவ் காயத்திலிருந்து மீண்டும் வந்து விளையாடுவதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. முதல் போட்டியில் கொஞ்சம் தடுமாறிய அவர் இன்னும் அடுத்து வரும் போட்டிகளில் அசத்துவார் என்று நம்பலாம்” எனக் கூறினார்.



