- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மஹி பாய் ஏரியா சென்னையில் சாதனை.. தோனியை விட நான் தான் சிறந்த கீப்பரா? ரிஷப் பண்ட் பதில்

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக சென்னையில் நிறைவு பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல உங்களையும் வீழ்த்துவோம் என்று எச்சரித்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக அப்போட்டியில் ரிசப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்த பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 634 நாட்கள் கழித்து களமிறங்கினார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் குவித்த அவர் 2வது இன்னிங்ஸில் சதமடித்து 109 ரன்கள் விளாசி கம்பேக் கொடுத்தார். அதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 6 சதங்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

தோனியை விட சிறந்தவரா:

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் வாழ்நாள் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் செய்ய முடியாத சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் தான் திறந்தவர் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ஒப்பீடு பற்றி சென்னை போட்டியில் முடிவில் ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு. “இது சிஎஸ்கே அணியின் சொந்த மைதானம். இங்கே மஹி பாய் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளார். ஆனால் ஏற்கனவே ஒரு முறை சொன்னது போல நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த விரும்பவில்லை”

- Advertisement -

ரிஷப் பண்ட் போதும்:

“என்னுடைய விஷயங்களில் எளிமையாக கவனம் செலுத்தி சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சிக்கிறேன். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் என்னுடைய செயல்முறைகளை எளிமையாக பின்பற்றி விளையாடுகிறேன். 3வது நாளில் வங்கதேசம் ஸ்பின்னர்களுடன் துவங்கியது. அப்போது நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்ததால் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டாகி ராகுல் பாய்க்கு பின் உள்ள டெயில் எண்டர்களை கொண்டு வர விரும்பவில்லை”

இதையும் படிங்க: என்ன மனுஷங்க இவரு.. அஷ்வினுக்கு ஒரு புது ஆஃபர் வச்சிருக்கேன் – வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா

“பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. அதைப் பயன்படுத்தி நான் சதமடிக்க விரும்பினேன். உணவு இடைவெளிக்குப்பின் டிக்ளேர் செய்வதைப் பற்றி பேசினார்கள். அதன் பின் ரோகித் சர்மா முடிந்தளவுக்கு வேகமாக ரன்கள் குவிக்குமாறு சொன்னார். அதனால் என்னால் 150 ரன்களை எடுக்க முடியும் என்று கூட நினைத்தேன்” எனக் கூறினார்.

- Advertisement -